'flex-fuel' எஞ்சின் தயாராகிறது; 6 மாதத்தில் எத்தனால், மெத்தனாலில் வாகனங்கள் ஓடும்: நிதின்கட்கரி உறுதி

Published : Mar 13, 2022, 05:13 PM ISTUpdated : Mar 13, 2022, 05:15 PM IST
'flex-fuel' எஞ்சின் தயாராகிறது; 6 மாதத்தில் எத்தனால், மெத்தனாலில்  வாகனங்கள் ஓடும்: நிதின்கட்கரி உறுதி

சுருக்கம்

இன்னும் 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருளான எத்தனால், மெத்தனால், ஹைட்ரஜன், எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் ஓடும். ஆட்டமொபைல் வாகனங்கள் என்னிடம் உறுதியளித்துள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இன்னும் 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருளான எத்தனால், மெத்தனால், ஹைட்ரஜன், எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் ஓடும். ஆட்டமொபைல் வாகனங்கள் என்னிடம் உறுதியளித்துள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாளேடு ஒன்றின் சார்பில் நேற்று நடந்த கருத்தரங்கில் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மாற்று எரிபொருள்

அரசுப் போக்குவரத்தில் இருக்கும் அனைத்து வாகனங்களையும், சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத எரிபொருளில் இயக்கும் வகையில் ஆலோசித்து வருகிறோம். இந்த வாரத்தில் ஆட்டமொபைல் நிறுவன அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அனைத்து இந்திய ஆட்டமொபைல் தாயாரிப்பாளர்கள் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். அவர்களிடம் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருளில் இயங்கும் வகையில்வாகனங்களைத் தயாரிக்க கேட்டேன். 

அதற்கு, அடுத்த 6 மாதத்துக்குள் பிளெக்ஸி-பியூவல் எஞ்சின் அதாவது பெட்ரோல்,டீசல் மட்டும்லலாது, எத்தனால்,மெத்தனால், சிஎன்சி,ஹைட்ரஜனி்ல் இயக்ககூடிய வாகனங்களை தயாரித்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

டிவிஎஸ், பஜாஜ்

பிளெக்ஸி பியூல் வாகனங்களை தாயாரிக்கும் முயற்சியில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவர்கள் முதலில் இரு சக்கர, 3 சக்கர வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளனர்.

அரிசி, மக்காச்சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்தும் பயோ-எத்தனாலோ விவசாயிகள் தயாரிக்கிறார்கள். நாட்டில் விரைவில் வாகனங்கள் அனைத்தும் 100 சதவீத எத்தனாலில் இயங்கும். பிளெக்ஸி பியூல் எஞ்சின்களை வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட வேண்டும் என கடந்த ஆண்டு கேட்டுக்கொண்டேன்.

சவாலான நேரம்

பசுமை ஹைடர்ஜனில் இயக்கப்படும் வாகனங்களுக்கும்அரசு முன்னுரிமை அளிக்கும். அதையும் அரசுஊக்கப்படுத்தி வருகிறது. 
மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நாம் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வருகிறோம். இதன் சர்வதேச சூழல்கள் சாதகமாக இல்லை. நாம் இப்போது கடினமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நேரம் நமக்கு சவாலான நேரம். 

விலை அதிகரிக்கும்

பயோ-எத்தனால், எல்என்ஜி எரிபொருள்தான் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விடை சிறந்தது. விலை குறைவானது, சுற்றுச்சூழலுக்குகேடில்லாதது. தற்போது ரூ.8 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம், இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
வட்டியிலேயே ரூ.2 லட்சம் வருமானமா? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் உங்களுக்கு தெரியுமா?