
இன்றைய காலத்தில் நூறு ரூபாய் என்றால் பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பவர்கள் அதிகம். ஆனால் அதே நூறு ரூபாயில் கூட, அமேசான் கிரேட் இந்தியன் சேல் மூலம் பயனுள்ள பொருட்களை வாங்க முடிகிறது. தினசரி வாழ்க்கையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
3D கிரிஸ்டல் பால் நைட் லைட்
படுக்கையறை, ஹால் அல்லது குழந்தைகள் அறைக்கு சிறிய நைட் லைட் தேடுகிறீர்களா? வெறும் ரூ.99-க்கே கிடைக்கும் இந்த 3D கிரிஸ்டல் பால் சிறந்த தேர்வு. இதில் உள்ள கிரக வடிவங்கள் 3D லேசர் தொழில்நுட்பத்தால் தெளிவாக பிரகாசிக்கின்றன. இரவு நேரத்தில் அழகையும், மென்மையான ஒளியையும் தரும்.
மொபைல் சார்ஜிங் ஸ்டாண்ட்
சார்ஜ் செய்யும் போது போனை எங்கு வைப்பது என்று யோசிக்க வேண்டாம். ரூ.119 விலையிலுள்ள இந்த சார்ஜிங் ஸ்டாண்ட், சுவரில் ஒட்டி பயன்படுத்தலாம். இது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும். போனுடன் சேர்த்து ஏசி அல்லது டிவி ரிமோட்டையும் வைக்கலாம் என்பதில் கூடுதல் சலுகை ஆகும்.
USB மினி ஃபேன்
பயணம் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்த சிறிய அளவிலான USB ஃபேன் மிகவும் உதவும். ரூ.85 விலையில் கிடைக்கும் இந்த ஃபேன், கேபிள் மூலம் இயங்கும். எடை குறைவாக இருப்பதால் எங்கும் எடுத்துச் செல்லலாம். பிளேடுகள் மென்மையான பொருளால் செய்யப்பட்டதால், காயம் ஏற்படுவதற்கான அபாயமே இல்லை.
அடாப்டர்
அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மின் இணைப்பு ஒரு சவாலாக இருக்கும். ரூ.98க்கு கிடைக்கும் இந்த அடாப்டர், நிலையான மின்சாரம் வழங்கும். லைட் இன்டிகேட்டர் வசதி இருப்பதால், மின்சாரம் வந்துவிட்டதா என்பதை எளிதில் அறியலாம். எடை குறைவானதால் பையில் வைத்து எளிதாக எடுத்துச் செல்லலாம்.
வெட்டும் கருவி
உலர் பழங்கள், வெங்காயம், வெள்ளரி அல்லது மென்மையான காய்கறிகளை வெட்ட வெறும் ரூ.79க்கு கிடைக்கும் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைப்பிடி வசதியுடன், வெட்டும் தடிமனையும் மாற்றிக் கொள்ளலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேடு நீண்ட நாள் நீடிக்கும்.
வாங்கும் முன் கவனிக்க வேண்டியது
மேலே குறிப்பிட்டுள்ள விலைகள் ஆன்லைனில் காண்பிக்கப்பட்டவையே ஆகும். டெலிவரி கட்டணங்கள் கூடுதலாக வரலாம். எனவே, பிற பொருட்களை வாங்கும் போது இவற்றையும் கார்ட்டில் சேர்த்தால் கூடுதல் சலுகை கிடைக்கும். குறைந்த செலவில், அதிக பயன் தரும் பொருட்கள் கிடைப்பதே இந்த சேலின் சிறப்பு ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.