நிரந்தரமோ....தற்காலிகமோ...!! ”அனைவருக்கும் ஒரே சம்பளம்தான் “ – உச்சநீதிமன்றம் அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 03:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
நிரந்தரமோ....தற்காலிகமோ...!!  ”அனைவருக்கும் ஒரே சம்பளம்தான் “ – உச்சநீதிமன்றம் அதிரடி

சுருக்கம்

நிரந்தரமோ....தற்காலிகமோ...!! ”அனைவருக்கும் ஒரே சம்பளம்தான் “ – உச்சநீதிமன்றம் அதிரடி:

அனைத்து  பணியாளர்களும்,  இனி “சம வேலைக்கு சம ஊதியம்”  பெரும்  வகையில்   தீர்ப்பை  வழங்கியுள்ளது  உச்சநீதிமன்றம்.

அதாவது,  தினசரி ஊதியம், தற்காலிக பணியாளர், ஒப்பந்த ஊழியர் ஆகியோருக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு ஊதியத்தை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு மிகவும்  குறைந்த  பட்ச  சம்பளத்தை   வழங்குவதை  எதிர்த்து,  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்தது.இது குறித்து  விளக்கமளித்த நீதிபதிகள், ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்க  வேண்டும் என்றும், இந்த  ஊதியத்தை  வைத்துகொண்டு, தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளார்கள்” எனவும்  நீதிபதிகள்  தெரிவித்தனர்.

மேலும், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத்திட்டு, இந்த  விதி, ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பதையும்  நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஊழியர்களை  பொறுத்தவரையில்,  நிரந்தரப் பணியாளரா அல்லது தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது என்றும், இனி ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக்  தெரிவிக்கப்பட்டுள்ளது...

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!
32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?