அமெரி்க்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட ஒரு மாதத்துக்குள், அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரி்க்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட ஒரு மாதத்துக்குள், அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24ம் தேதி அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட உயர்ந்திருந்தது. ஆனால், ஒரு மாதத்துக்குள் ரூ.12 லட்சம் கோடி சரிந்துள்ளது.
பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரைக்கும் 5% ஜிஎஸ்டி வரி: ஏஏஆர் அறிவிப்பு
பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு மற்றும் மோசடிகள் குறித்து கடந்த மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் மீது புயல் வீசத் தொடங்கி, படிப்படியாகச் சரியத் தொடங்கியது.
கடந்த ஒரு மாதத்துக்குள் அதானி குழுமத்தில் உள்ள பங்குகள் மதிப்பு மோசமாகச் சரிந்து, கடந்த ஓர் ஆண்டுக்கு முந்தைய நிலையை எட்டியிருக்கிறது. பங்குசந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவில், அதானி குழுமத்தின் எம்-கேப் பங்குகள் மதிப்பு ரூ.7.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
எல்ஐசிக்கு முதல்முறையாக இழப்பு| அதானி குழும பங்குகளில் முதலீட்டின் மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
ஏறக்குறைய ஜனவரி 24ம் தேதியிலிருந்து நேற்றுவரை அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, ஏறக்குறைய 70 சதவீத மதிப்பை அதானி பங்குகள் இழந்துள்ளன. உச்சகட்டமாக அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு ரூ.25 லட்சம் கோடியைத் தொட்டிருந்தநிலையில் இப்போது ரூ.7.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.