லிட்டருக்கு 34.5 கி.மீ. மைலேஜ் வழங்கும் 2022 வேகன்ஆர் அறிமுகம் - மாஸ் காட்டிய மாருதி சுசுகி

By Kevin KaarkiFirst Published Feb 26, 2022, 12:31 PM IST
Highlights

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் 2022 வேகன்ஆர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வேகன்ஆர் மாடலின் விலை ரூ. 5.40 லட்சம் என நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.10 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ மாடல் டூயல் டோன் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இதத்துடன் டாப் எண்ட் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. டூயல் டோன் டிசைன் வேகன்ஆர் ZXi+ வேரியண்டில் வழங்கப்படுகிறது. டூயல்  டோன் ஆப்ஷன் கல்லண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், மேக்மா கிரே மற்றும் பிளாக் ரூஃப் நிறங்களில் கிடைக்கிறது. புதிய காரின் உள்புறத்தில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ மற்றும் ஸ்மார்ட்போன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலிலும் 1 லிட்டர், 3 சிலிண்டர், 1.2 லிட்டர், 4 சிலிண்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் CNG மற்றும் H3 டூர் வேரியண்ட்களும் கிடைக்கின்றன. இதன் 1 லிட்டர் என்ஜின் மாடல் லிட்டருக்கு 25.19 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதன் S CNG வேரியண்ட் லிட்டருக்கு 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

இத்துடன் டூயல் ஏர்பேக், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), EBD, முன்புறம் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சார்கள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. புதிய  வேகன்ஆர் மாடலை மாதம் ரூ. 12,300 கட்டணததில் சந்தா முறையிலும் வாங்கி பயன்படுத்தலாம். இந்திய சந்தையில் மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டாடா டியாகோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

click me!