Published : Feb 01, 2025, 06:32 AM ISTUpdated : Feb 06, 2025, 12:38 PM IST

Budget 2025 LIVE Updates: மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை

சுருக்கம்

தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர் வருமான வரி கட்ட அவசியமில்லை என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Budget 2025 LIVE Updates: மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை

01:51 PM (IST) Feb 01

Budget 2025 - தொழிலாளர் அடையாள அட்டை!!

01:49 PM (IST) Feb 01

நிர்மலா சீதாராமன் கூறிய திருக்குறள்!!

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது கூறிய திருக்குறள் என்ன?

மேலும் படிக்க: Budget 2025: மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறள்!

01:07 PM (IST) Feb 01

பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்!!

பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்; விலை அதிகரிக்கும் பொருட்கள் முழு விபரம்!!

மேலும் படிக்க: பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்; விலை அதிகரிக்கும் பொருட்கள் முழு விபரம்!!

12:55 PM (IST) Feb 01

ரூ.6 லட்சம் வரை வாடகை வருவாய்க்கு வரியில்லை

ரூ.6 லட்சம் வரையிலான வாடகை வருவாய்க்கு இனி TDS வரிப்பிடித்தம் கிடையாது. இதுவரை ரூ.2.40 லட்சத்திற்கு மேலான வாடகை வருவாய்க்கு TDS வரிப்பிடித்தம் அமலில் இருந்தது.

12:49 PM (IST) Feb 01

பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாருக்கு அறிவித்த திட்டங்கள்

இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும். பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும் பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள். பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும். தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
 

12:34 PM (IST) Feb 01

உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு!!

உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு வரிவிலக்கு.. பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

12:27 PM (IST) Feb 01

ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு

அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு
என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

12:24 PM (IST) Feb 01

Income Tax: ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை!

Budget 2025; ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற பெரிய பரிசை மக்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்து இருக்கிறார்.

மேலும் படிக்க: Budget 2025: வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

12:20 PM (IST) Feb 01

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இதனால் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர் வருமான வரி கட்ட அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.

12:13 PM (IST) Feb 01

பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன்!!

Budget 2025: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு கம்பீரமாக வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

12:10 PM (IST) Feb 01

எந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும்?

Budget 2025: பட்ஜெட்டில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானம், புகையிலை மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் மீதான வரிகள் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க: பட்ஜெட் 2025: எந்த பொருட்கள் விலை குறையும், எவை அதிகரிக்கும்? முழு லிஸ்ட் இங்கே

12:08 PM (IST) Feb 01

லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்டரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

12:07 PM (IST) Feb 01

இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள்!!

இளைஞர்களின் திறனை வளர்க்கும் வகையில் தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Budget 2025 : இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் சூப்பர் திட்டங்கள் அறிவிப்பு!!

12:04 PM (IST) Feb 01

அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள்! நிர்மலா சீதாராமன்

2033ம் ஆண்டிற்குள் நாட்டில் புதியதாக 5 அணு உலைகள் அமைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

12:04 PM (IST) Feb 01

Budget 2025: உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு

36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் இன்றும் மட்டும் வசூலிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:58 AM (IST) Feb 01

மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது

ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது என மத்திய  பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:57 AM (IST) Feb 01

Budget 2025 - கிசான் கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!!

2025 மத்திய பட்ஜெட்டில், கிசான் கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு, தானியம், பஞ்சு உற்பத்திக்கு சிறப்புத் திட்டங்கள் மற்றும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் புதிய திட்டங்களும், 100 மாவட்டங்களில் வேளாண் வளர்ச்சிக்கு ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

11:57 AM (IST) Feb 01

புதிய வருமான வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல்

புதிய வருமான் வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், 60 ஆண்டுகாலமாக இருக்கும் வருமான வரி சட்டத்தை மாற்றும் வகையில் மசோதா இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். 

11:55 AM (IST) Feb 01

புதிய வருமான வரி மசோதா தாக்கல் எப்போது?

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Budget 2025: புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்! பட்ஜெட்டில் அறிவிப்பு

11:50 AM (IST) Feb 01

Budget 2025-26: மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்!!

மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Budget 2025 : மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்! நிதியமைச்சர் அறிவிப்பு!

11:48 AM (IST) Feb 01

Budget 2025: ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம்

உணவு விநியோகம் உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அவர்களுக்கு என்று தனித இணையதளம் தொடங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:46 AM (IST) Feb 01

ரயில்வே, பாதுகாப்பு, ஐடி புதிய அறிவிப்புகள்!!

Budget 2025: ரயில்வே, பாதுகாப்பு, ஐடி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளுக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்.

மேலும் படிக்க: 2025 மத்திய பட்ஜெட்: ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து & வங்கித்துறைகள்

11:42 AM (IST) Feb 01

Budget 2025: ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என  பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

11:41 AM (IST) Feb 01

ரயில்வே, விவசாயம், சுகாதாரம் பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு!?

Budget 2025: பட்ஜெட்டில் ரயில்வே, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, விவசாயம், தொலைத்தொடர்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்ஜெட் அறிவிப்பால் என்ன மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க: மத்திய பட்ஜெட் 2025: ரயில்வே, பாதுகாப்பு, ஐடி, சுகாதாரம், மருத்துவம் - எதிர்பார்ப்புகள்

11:37 AM (IST) Feb 01

Budget 2025: வங்கி விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது!!

பிப்ரவரி ஒன்று முதல் வங்கி விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க: பிப். 1 முதல் வங்கி விதிகளில் 5 பெரிய மாற்றங்கள்! வாடிக்கையாளர்கள் உஷார்!

11:36 AM (IST) Feb 01

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம்

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:30 AM (IST) Feb 01

Budget 2025: லாஜிஸ்டிக் மையமாக மாறும் இந்திய அஞ்சல்துறை

இந்திய அஞ்சல்துறை மிகப்பெரிய அளவில் லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

11:26 AM (IST) Feb 01

Budget 2025 - நிர்மலா சீதாராமன் சேலையின் ரகசியம்!!

Budget 2025 - நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் சேலையின் தத்துவம் என்னவென்று பார்க்கலாம்.

மேலும் படிக்க: Budget 2025 Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாள் சேலையில் மறைந்திருக்கும் ரகசியம்!!

11:25 AM (IST) Feb 01

Budget 2025: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடி உயர்வு

பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. 

11:18 AM (IST) Feb 01

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

11:17 AM (IST) Feb 01

Budget 2025-26: பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு முக்கியத்துவம்? நிர்மலா சீதாராமன் தகவல்

வரி, ஆற்றல் துறை, நகர வளர்ச்சி, கனிமவளம், நிதித்துறை , ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட இந்த 6  துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. 

11:12 AM (IST) Feb 01

Union Budget 2025 Live: மத்திய பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டது

இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

11:07 AM (IST) Feb 01

Budget 2025-26: இந்திய பொருளாதாரம் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது

நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:05 AM (IST) Feb 01

Budget 2025-26 - ஏசியாநெட் தமிழ் நேரலை....

Budget 2025-26 - மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்து வருகிறார். ஏசியாநெட் தமிழ் நேரலை....

11:02 AM (IST) Feb 01

Budget 2025-26: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார். 

10:52 AM (IST) Feb 01

Budget 2025 Live: சுகாதாரத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?

இன்றைய பட்ஜெட்டில் மருத்துவ துறைக்கு முக்கியத்தும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நோயாளிகளுக்கு பலன் அளித்து, மருத்துவ சிகிச்சைகளை எளிதாக்கி, விலைகளை குறைத்து, காப்பீட்டு வசதிகளை மேம்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகலாம். 

10:47 AM (IST) Feb 01

மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

10:44 AM (IST) Feb 01

வருமான வரி முறையில் சீர்திருத்தம் செய்யப்படுமா?

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோரை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகள் என்னென்ன? வரி நிவாரண நடவடிக்கைகள், வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்தி வரி செலுத்துவோர் மீதான சுமையைக் குறைக்கும் புதிய கொள்கைகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க: Budget 2025: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி முறையில் சீர்திருத்தம் செய்யப்படுமா?

10:32 AM (IST) Feb 01

அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமயில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அதில் பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார்.

10:20 AM (IST) Feb 01

மத்திய பட்ஜெட் எதிரொலி! பங்குச்சந்தைகள் ஏற்றம்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில்  பங்குச்சந்தைகள் ஏற்றமத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளும், நிஃப்டி 335 புள்ளிகளும் உயர்வு கண்டுள்ளது. 


More Trending News