Published : Feb 01, 2022, 07:58 AM ISTUpdated : Feb 01, 2022, 08:53 AM IST

Budget 2022 Live : பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட் 2022.. முக்கிய தகவல்கள் இதோ..

சுருக்கம்

புதிய வரிவிதிப்பு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பில் தளர்வு இருக்குமா, தொழில்துறையினருக்கு சலுகை இருக்குமா என சாமானியர்கள் முதல் சகலதரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் ஒவ்வொரு பட்ஜெட் தூண்டி வருகிறது

Budget 2022 Live : பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட் 2022.. முக்கிய தகவல்கள் இதோ..

12:37 PM (IST) Feb 01

இந்தமுறையும் ஏமாற்றம்….தனிநபர் வருமானவரிவிதிப்பில் மாற்றமில்லை

 

12:34 PM (IST) Feb 01

வைரங்கள், ஆபரணக் கற்களுக்கான வரிக் குறைப்பு

12:31 PM (IST) Feb 01

பிட் காயினை பரிசளித்தாலும் வரி

12:28 PM (IST) Feb 01

மாநில அரசு ஊழியர்களுக்குச் சலுகை

12:26 PM (IST) Feb 01

பிட் காயின் வருமானத்துக்கு வரி

 

12:23 PM (IST) Feb 01

2 ஆண்டுகள் அவகாசம்

12:20 PM (IST) Feb 01

ரூ.10.68 லட்சம் கோடியில் மூலதனச் செலவு

 

12:11 PM (IST) Feb 01

டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம்

12:06 PM (IST) Feb 01

கிராமங்களில் ஆப்டிகல் ஃபைர் கேபிள்

12:02 PM (IST) Feb 01

பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தி முக்கியத்துவம்

11:57 AM (IST) Feb 01

இந்த ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை

11:52 AM (IST) Feb 01

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 60 ஆயிரம் வீடுகள்

 

11:48 AM (IST) Feb 01

ரூ.60ஆயிரம் கோடியில் 3.80 கோடி வீடுகளுக்கு குடிநீர் வசதி

 

11:45 AM (IST) Feb 01

சிப்-பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்


மல்டி-மாடல் சரக்குப் போக்குவரத்து பூங்கா உருவாக்க 2022-23ம் ஆண்டில் 4 நகரங்களில் புதிய ஒப்புதல் வழங்கப்படும். பாஸ்போர்ட்களில் சிப் பொருத்தப்பட்டு இ-பாஸ்பாோர்ட் வழங்கப்படும். 

11:44 AM (IST) Feb 01

வங்கி சேவையில் 1.50 லட்சம் தபால் நிலையங்கள்


வங்கி சேவைக்குள் 1.50 லட்சம் தபால் நிலையங்கள் கொண்டுவரப்படும். இணையதள வங்கிச் சேவை, ஏடிஎம் வசதி, பணப்பரிமாற்றம், தபால்நிலையத்திலிருந்து வங்கிகளுக்கு இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யும் வசதி செய்யப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் முதியோர், மக்கள் அதிகமாகப் பயன்பெறுவார்கள், நிதி வசதி மேம்படும்

11:38 AM (IST) Feb 01

மாணவர்களுக்கு 200 கல்வி சேனல்கள்


டிஜிட்டல் முறையில் கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற முறையில் 1முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் 200 சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 

11:36 AM (IST) Feb 01

ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள்

 

11:32 AM (IST) Feb 01

மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்


1-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் திட்டங்கள் மேம்படுத்தப்படும். நாடுமுழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். 

11:28 AM (IST) Feb 01

ரூ.2.37 லட்சம் கோடிக்கு வேளாண் கொள்முதல்


வரும் 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களை ரூ.2.37 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுதும் ரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்ய விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

11:25 AM (IST) Feb 01

அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும்


பிரதமரின் கதிசக்தியின் திட்டம் 7 எஞ்சின்களைக் கொண்டதாக பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும். 2023ம் ஆண்டுக்குள் 2000கி.மீ தொலைவுக்கு ரயில்வே பாதை மேம்பாடு. உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை ஊக்கப்படுத்தியுள்ளது. இதனால் 6 லட்சம் வேலைவாய்புகள் உருவாகியுள்ளன. 

11:23 AM (IST) Feb 01

கோதாவரி-பெண்ணாறு-காவரி இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி


கோதாவரி, பெண்ணாறு காவிரி ஆற்றை இணைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும், அதற்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. 5 நதிகளை இணைக்கும் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

11:20 AM (IST) Feb 01

இயற்கை முறை விவசாயத்துக்கு முக்கியத்துவம்


இயற்கை முறை விவசாயம் ஊக்கப்படும். விவசாயிகளின் நிலத்தை அளக்கவும், வரையரை செய்யவும், வேளாண் பணிகளுக்கு ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும், முக்கியத்துவம் அளிக்கப்படும். 

11:14 AM (IST) Feb 01

400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்


ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். நாடுமுழுவதும் 22 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ரயில்வே பாதை, கட்டமைப்பு மேம்படுத்தப்படும்


 

11:11 AM (IST) Feb 01

பொருளதார வளர்ச்சி 9.27% உயரும்


இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.27%  இருக்கும். ஏழைகளுக்கு அனைத்துவாய்ப்புகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 

11:08 AM (IST) Feb 01

விரைவில் எல்ஐசி பொதுப்பங்கு வெளியிடப்படும்


25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் எல்ஐசி பொதுப்பங்கு வெளியிடப்படும்.  
 

11:06 AM (IST) Feb 01

அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்

அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் - நிதியமைச்சர்

11:04 AM (IST) Feb 01

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். 

10:53 AM (IST) Feb 01

மக்களுக்கு மகிழ்ச்சி…சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு


மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வர்த்தகரீதியிலான 19.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ.91.50 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பையடுத்து, சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,907 ஆகக் குறைந்துள்ளது. விமானங்களுக்குப் பயன்படும் ஏடிஎப் எரிபொருள் விலை 8.5% விலை அதிகரித்துள்ளது

10:44 AM (IST) Feb 01

மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் 4-வது பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து, பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளனர் எம்பி.க்களுக்கு வழங்கப்பட உள்ள பட்ஜெட்  ஆவணங்களும் நாடாளுமன்றம் கொண்டுவரப்பட்டன. தீவிரமான சோதனைகளுக்குப்பின் அந்த ஆவணங்களும் கொண்டு செல்லப்பட்டன

10:26 AM (IST) Feb 01

நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

10:22 AM (IST) Feb 01

“பகி கட்டா” இல்லை- சிவப்புநிற பையில் டேப்ளட்


மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தாக்கல்செய்த முதல் பட்ஜட்டெலிருந்து வழக்கமான சிவப்பு நிற ப்ரீப்கேஸைத் தவிர்த்து பாரம்பரியமான பகி கட்டா துணியில் பட்ஜெட் ஆவணங்களைக்கொண்டுவந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா தாக்கல் செய்தார். இதனால் பகிகட்டாவுக்குப் பதிலாக டேப்ளட்டை நிர்மலா கொண்டுவந்தார், இந்த ஆண்டு பெருந்தொற்று பரவல் இருப்பதாலும், காகிதப்பயன்பாட்டை குறைக்கவும் 2வது முறையாக டேப்ளட்டுடன் நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்

10:15 AM (IST) Feb 01

4-வது பட்ஜெட்டில் பிரவுன்நிற புடவையில் நிர்மலா


மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளநிலையில் பிரவுன் நிற புடவையில் சிவப்புநிறம் கலந்து அணிந்து வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டு நிர்மலா சீதாராமனின் உடை பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்கும் இந்த ஆண்டு பிரவுன் நிறம் என்பது எதிர்ப்புகளை தாங்குதல், சக்தி, அதிகாரம், பாதுகாப்பு, அன்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கைத்தறி துணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைத்தறி பட்டுப்புடவையை நிர்மலா அணிந்துள்ளார். கடந்த 2021-22 பட்ஜெட்டின்போது சிவப்பு நிறப் பட்டுப் புடவையும், 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டின்போது மஞ்சள், தங்கநிறம் கொண்ட பட்டுப்புடவையும், 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டின்போது மஞ்சள் நிறப்புடவையும் அணிந்து நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

10:04 AM (IST) Feb 01

பட்ஜெட்டால் பங்குச்சந்தை உயர்வு


மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதையடுத்து, பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 582புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 156 புள்ளிகளும் உயர்ந்த நிலையில் வர்த்தகம் தொடங்கி நடந்து வருகிறது.

10:00 AM (IST) Feb 01

உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம்


வரும் 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்தவும், சாலைவசதி, ரயில்வே ஆகியவற்றுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது. குறைந்தவிலை வீடுகள் வாங்குவதற்காக நடுத்தரப்பிரிவினருக்கு சலுகைகள், மானியங்கள் வழங்கப்படலாம்.

09:53 AM (IST) Feb 01

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு


மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் டாக்டர் பாகவத் கிஷன்ராவ்காரத், ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி, மூத்த அதிகாரிகள் ஆகியோர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று காலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்


 

09:45 AM (IST) Feb 01

work from home செய்பவர்களுக்கு சலுகை

 

2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் வீட்டில் இருந்து பணியாற்றுவோர்(work from home) வரிச்சலுகை அளிக்கப்படலாம் என பெரும்பலான பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இனியும் பலரும் வீட்டிலிருந்தே பலரும் பணிபுரிய விரும்புகிறார்கள். வீ்ட்டிலிருந்து பணிபுரிவதன் மூலம் கூடுதலாக மின்சாரம், இணையதளம், மருத்துவச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்ட சலுகை அளிக்கப்படலாம்.

அவ்வாறு சலுகை அளிக்கப்பட்டால், வரிசெலுத்துவோர் செலவு மிச்சமாகி சேமிப்பு அதிகரிக்கும், வரிசலுகை அளிப்பதன்மூலம் அந்தத் தொகையை வேறு செலவுகளுக்கு பணத்தைத் திருப்புவார்கள்.மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் வரை வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இதன்படி வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் 80சி படிவம் மூலம் ரூ.50ஆயிரம்வரை விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது
 

09:39 AM (IST) Feb 01

11 மணிக்கு பட்ஜெட் உரை தொடக்கம்..

சரியாக 11 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்குகிறார் நிர்மலா சிதாராமன்

09:12 AM (IST) Feb 01

7-வது மாதமாக லட்சம் கோடிகளில் கொட்டும் ஜிஎஸ்டி வரி வசூல்

08:51 AM (IST) Feb 01

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்? கடைசி நேர எதிர்பார்ப்புகள்..

புதிய வரிவிதிப்பு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பில் தளர்வு இருக்குமா, தொழில்துறையினருக்கு சலுகை இருக்குமா என சாமானியர்கள் முதல் சகலதரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் ஒவ்வொரு பட்ஜெட் தூண்டி வருகிறது. விரிவான பட்ஜெட் அலசலுக்கு இங்கே க்ளிக் செய்யவும் click here

08:20 AM (IST) Feb 01

ஏழை, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள்:

சம்பளம் வாங்கும் சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? ஊதியம் பெறும் சாமானிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும், நிலையான கழிவில் உயர்வு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா, குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் செலவுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுமா போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன


More Trending News