Yulu Wynn EV Scooter : பெருவாரியான மக்கள் இப்பொது எலக்ட்ரிக் வகை வாகனங்களுக்கு மாறி வரும் நேரத்தில், இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் இப்பொது அவ்வகை வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது, பாரம்பரிய இரு சக்கர வாகனங்களைத் தவிர, குறிப்பாக ஸ்கூட்டர் பிரிவில் மக்கள் மின்சார வாகனங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இந்த Yulu நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை பயன்படுத்த சாவி தேவையில்லை. அதே போல இதற்கு ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த தகவல்கள் பெரிய அளவில் இல்லை.
Yulu Wynn எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இதன் ஆரம்ப விலை இப்போது ரூ.55,555 ஆக குறைந்துள்ளது. இது ஒரு அறிமுக சலுகை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் இதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.999க்கு பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Scarlet Red மற்றும் Moonlight White ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கும்.
Yulu Wynn, மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) கீழ் குறைந்த வேகப் பிரிவில் வருகிறது என்பதால், அதை ஓட்டுவதற்கு உங்களுக்கு ஹெல்மெட் அல்லது ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று கூறப்படுகிறது. Yulu நிறுவனம் 15 வோல்ட் 19.3Ah திறன் கொண்ட பேட்டரி பேக்கை வழங்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 68 கிலோமீட்டர் வரை IDC வரம்புடன் வருகிறது. இருப்பினும், நகரத்தில் அதன் வரம்பு 61 கிலோமீட்டர்கள் என்று கூறப்படுகிறது.
இதில் BLDC மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 24.9 கிலோமீட்டர் ஆகும். இது மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் அதை மாற்ற 1 நிமிடம் மட்டுமே ஆகும் என்று அந்நிறுவனம் கூறுகின்றது.
Tata Harrier EV 2024 ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 500 கி.மீ போகும்!