Tata Harrier EV 2024 ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும் 500 கி.மீ போகும்!

By Manikanda Prabu  |  First Published Feb 16, 2024, 10:40 AM IST

ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை செல்லும் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரான Tata Harrier EV நடப்பாண்டில் சந்தைக்கு வரவுள்ளது


நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUV ரக காரான Tata Harrier EVஐ கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் காட்சிப்படுத்தியது.

நடப்பாண்டில் சந்தைக்கு வரவுள்ள Tata Harrier EV காரை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் போட்டால் சுமார் 500 கி.மீ வரை செல்லும். டாடா நிறுவனத்தின் Nexon EV 465 கி.மீ. ரேஞ்சு செல்லும் திறன் பெற்றிருக்கும் நிலையில், அதனை விட அதிக ரேஞ்ச் செல்லும் கார் விற்பனைக்கு வரவுள்ளதால் பெரும் எதிர்பார்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Tata Harrier EV கார், பிரீமியம் SUV செக்மென்ட்டில் ஹூண்டாய் கோனா EV காருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

Latest Videos

undefined

Tata Harrier EV கார், முன்பக்கம் முக்கோண வடிவ LED ஹெட் லேம்ப், புதுமையான கிரில் வசதி, புதிய அலாய் வீல், பிரெஷ் LED டைல் லைட், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழு நீளத்திற்கு LED லைட் பார் வசதிகளை கொண்டது. புதிய அலாய் வீல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இந்த கார், ICE பதிப்பை ஒத்ததாக தெரிகிறது.

காரின் உட்புறம் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு வசதி, வென்டிலேட் சீட், பேனரோமிக் சன் ரூப், டிரைவிங் மோட் உள்ளிட்டவை இருக்கின்றன.

இப்போது விற்பனை செய்யப்படும் Nexon EV காரின் டாப் மாடலில் இருக்கும் வசதிகள் Harrier EV காரின் அடிப்படை மாடல் வசதிகளாக இருக்கும். பேட்டரி பேக்கில், இது 500+ கிமீ வரம்பில் 50 - 60 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் விருப்பங்களுடன் வரும் என தெரிகிறது.

ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் இந்தியாவின் முதல் சி.என்.ஜி. கார் இதுதான்! எப்படி இருக்கு பாருங்க!

Tata Harrier EV அம்சங்களை பொறுத்தவரை, காற்றோட்டமான இருக்கைகள், 360 சரவுண்ட் வியூ கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், முன் இயங்கும் இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள், லெவல் 2 ADAS, LED ஹெட்லேம்ப்கள் உள்ளன. ஆஃப்-ரோடு திறன் கொண்டதாக இருக்கும் என ஒரு வதந்தி பரவுவதால், 4×2 மற்றும் 4×4 டிரைவ் வகையையும் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு விஷயத்திலும் டாடா ஹாரியர் EV சிறந்த விளங்கும் என தெரிகிறது. மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த கார் அநேகமாக மார்ச் மாதத்திற்குள் சந்தைக்கு வரும் என தெரிகிறது.

click me!