Xiaomi SU7: எலெக்ட்ரிக் கார் விற்பனையில் குதித்த சியோமி! டெஸ்லாவுக்கு பயங்காட்டும் மிரட்டலான என்ட்ரி!

By SG Balan  |  First Published Nov 16, 2023, 10:37 PM IST

சியோமியின் Xiaomi SU7 எலக்ட்ரிக் கார் ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் Tesla Model 3, BYD Seal, BMW i4 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் போட்டியிட உள்ளது.


சீனாவைச் சேர்த்த எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளரான சியோமி இந்தியாவில் மொபைல் விற்பனையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது, தனது முதல் காரை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி SU7 (Xiaomi SU7) என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் செடான் வகை ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஹோல்டிங் (BAIC) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக ஒப்பந்தத்தில் சியோமி கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காரில் சியோமியின் பிரபலமான பிராண்ட் பெயரான 'Mi' என்பதே இடம்பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

Xiaomi SU7 கார் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வந்திருக்கிறது. ஒன்றில் 220 kW (295 hp) மோட்டார் உள்ளது இது மணிக்கு 210 கி.மீ. அதிகபட்ச வேகம் கொண்டது. 495 kW டூயல்-மோட்டார் கொண்ட மற்றொன்றில் மணிக்கு 265 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்ல முடியும்.

100 பிளாட்களில் திருட்டு விழா நடத்திய சீட்டிங் சாம்பியன்ஸ்... நகைகள், கரன்சி, வாட்ச் கொள்கை!

SU7, SU7 Pro மற்றும் SU7 Max என மூன்று மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. Xiaomi SU7 4,997 மிமீ நீளம், 1,963 மிமீ அகலம், 1,455 மிமீ உயரம் மற்றும் 3,000 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. சக்கர அளவுகள் 19-இன்ச் முதல் 20-இன்ச் வரை இருக்கும். இந்தக் காரின் எடை மாடலைப் பொறுத்து 1,980 கி.கி முதல் 2,205 கி.கி. வரை இருக்கும்.

Xiaomi SU7 மாடலில் BYD இன் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) பேட்டரியை இருக்கும். மற்ற இரண்டு வேரியண்டகளில் CATL பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். SU7 மின்சார காரில் சியோமியின் HyperOS பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கார்கள் இரண்டையும் இயக்கக்கூடிய சியோமியின் சொந்த இயங்குதளம் ஆகும்.

ரூ.430 கோடிக்கு விற்பனையான ரேஸ் கார்... மெர்சிடஸ் பென்ஸ்க்கு சவால் விடும் ஃபெராரி

சீனாவில் இந்தக் காரை புக் செய்பவர்களுக்கு பிப்ரவரி 2024 முதல் இந்த எலக்ட்ரிக் கார் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் Xiaomi SU7 எலக்ட்ரிக் கார் ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் Tesla Model 3, BYD Seal, BMW i4 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் போட்டியிட உள்ளது.

 

click me!