நாயகன் மீண்டும் வரார்.. புதிய அவதாரத்தில் மிரட்ட தயார்.. ஸ்கெட்ச் போட்ட ரெனால்ட்

Published : Dec 12, 2025, 04:56 PM IST
Duster

சுருக்கம்

ஒரு காலத்தில் இந்திய SUV சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ரெனோ டஸ்டர், தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் மீண்டும் வரத் தயாராகிவிட்டது.

பிரபலமான SUV மாடலான டஸ்டர் இந்திய சாலைகளில் மீண்டும் திரும்ப வர தயாராக உள்ளது. 2012ல் அறிமுகமான இந்த கார், ஒருகாலத்தில் விற்பனையில் முன்னணி நிலையைப் பெற்றிருந்தது. ஆனால் சரியான அப்டேட்கள் வழங்கப்படவில்லை, உறுதியான போட்டி உருவானது. மேலும் புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலில் வந்தது என்பதனால், 2022 தொடக்கத்தில் இது உற்பத்தியில் இருந்து நீக்கப்பட்டது. 

மூன்றாம் தலைமுறை டஸ்டரை முற்றிலும் புதிய வடிவில் மீண்டும் அறிமுகமாக உள்ளது. புதிய டஸ்டர் 2026 ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. புதிய தலைமுறை டஸ்டர், முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது மிகவும் திடமான மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது பல உலகளாவிய கார் மாடல்களில் பயன்படுத்தப்படும் CMF-B பிளாட்ஃபார்மில் உருவாகும். 

டேசியா டஸ்டரின் டிஎன்ஏயைத் தழுவியும், ரெனோவின் புதிய லோகோவுடன் கூடிய முன்பக்க கிரில், மெலிந்த எல்இடி ஹெட்லெம்ப்கள், பெரிய ஏர் டேம்கள், கூர்மையான பானெட் லைன்கள் போன்றவை இடம்பெற வாய்ப்பு அதிகம். கூடுதலாக, டைமண்ட்-கட் அலாய் வீல்கள், வலுவான முன் மற்றும் பின்புற ஃபெண்டர்கள், வீல் ஆர்ச் கிளாடிங், செயல்பாட்டு ரூஃப் ரெயில்கள், சி-வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் போன்ற அம்சங்கள் புதிய தலைமுறை டஸ்டரின் வெளி வடிவமைப்பை மேலும் மேம்படுத்துகிறது.

கருப்பு அல்லது டூயல்-டோன் இன்டீரியர், 10-இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிலே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், 7-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை முக்கிய ஹைலைட்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டஸ்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரக்கூடும். 

இதில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்; இது அதிகபட்சமாக 156 bhp பவரை உருவாக்கும். கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் யூனிட் இடம் பெறும். மொத்தத்தில், முற்றிலும் புதிய வடிவம், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆகியவற்றுடன் ரெனோ டஸ்டர் மீண்டும் இந்திய SUV சந்தையில் வலுவான நுழைவைக் காணத் தயாராகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குறைந்த விலை கார் வாங்க நல்ல நேரம்.. க்விட் மீது பெரிய சலுகை.. ரூ.70,000 வரை தள்ளுபடி
வெறும் 6 மாதத்தில் 2 லட்சம் யூனிட்கள் விற்ற ஏத்தர் ரிஸ்டா.. ஸ்கூட்டர் விலை எவ்வளவு?