குஜராத்தில் ரூ.13,000 கோடியில் உருவாகும் டாடா மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலை

By SG BalanFirst Published Jun 5, 2023, 10:57 AM IST
Highlights

டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா அகரடாஸ் (Tata Agaratas) மணிக்கு 20 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்க உள்ளது.

டாடா குழுமம் லித்தியம்-அயன் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை அமைக்க குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைக்காக முதல்கட்டமாக ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா அகரடாஸ் (Tata Agaratas) எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 20 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

275 பேர் உயிரிழப்பு; அசுர கதியில் வேலை; மீண்டும் ரயில்கள் இயக்கம்; மனம் உருகிய அமைச்சர்!!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் 2070ஆம் ஆண்டுக்குள் வாகனங்களில் இருந்து கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போதைய சூழலில் மின்சார வாகனப் போக்குவரத்தில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது.

டாடா தொழிற்சாலை குஜராத்தை லித்தியம்-பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் வைக்கும் என்றும், மாநிலத்தில் உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசு உதவி செய்யும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பிரிட்டனில் ஒரு பெரிய மின்சார வாகன பேட்டரி ஆலையை அமைக்க பரிசீலித்து வரும் நேரத்தில் டாடா குழுமம் குஜராத்தில் அதேபோன்ற ஆலை அமைக்க முடிவு செய்திருக்கிறது. பிரிட்டன் அரசு தொழிற்சாலை அமைக்க பல உதவிகள் செய்வதாகக் கூறியிருப்பதால், டாடா நிறுவனம் ஸ்பெயினுக்குப் பதில் பிரிட்டனில் மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலையை அமைக்க வாய்ப்பு உள்ளது என கடந்த மே மாதம் தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை வருவது எப்போது? எலான் மஸ்க் சொன்ன குட் நியூஸ்!

click me!