பட்டைய கிளப்பும் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் மாடல்! 465 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் சூப்பர் எலெக்ட்ரிக் கார்!

By SG Balan  |  First Published Oct 3, 2023, 2:56 PM IST

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் கார் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரண்டின் விலையும் ரூ.14.74 லட்சம் மற்றும் ரூ.18.19 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் டாடாவின் நெக்ஸான் (Tata Nexon EV) கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் (Facelift) மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கான புக்கிங் முடிவடைந்த நிலையில், டெலிவரி பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் கார் மிட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில் மிட் ரேஞ்ச் வெர்ஷன் மாடலின் விலை ரூ.14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் வெர்ஷன் ஆரம்ப விலை ரூ.18.19 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் காரின் மிட் ரேஞ்ச் மாடல் 30 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 325 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம். லாங் ரேஞ்ச் மாடலில் 40.5 kWh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 465 கிலோ மீட்டர் பயணிக்கலாம்.

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் மாடலின் இந்த சிறப்பான ரேஞ்சுக்கு அராய் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்ளது. புது 2 ஸ்போக் ஸ்டியரிங், 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன. கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் போன்ற அம்சங்களும் இருக்கின்றன.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. மஹிந்திரா XUV400 EV, ஹூண்டாய் கோனா EV ஆகிய மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த நெக்ஸான் மாடல் கட்டும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

click me!