வெறும் ரூ.45 ஆயிரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கிய கேரள இளைஞர்! ஆச்சரியத்தில் கார் பிரியர்கள்!

By SG Balan  |  First Published Oct 3, 2023, 12:25 PM IST

கேரள இளைஞர் ஒருவரின் திறமையால் சாதாரண மாருதி சுசுகி 800 கார் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காராக மாறியிருக்கிறது.


உலக அளவில் பிரபலமான கோடீஸ்வரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரை வெறும் 45 ஆயிரம் ரூபாய் செலவில் தானே உருவாக்கி இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஹதிஃப்.

ஹதிஃப் இதுபோன்று கார்களின் தோற்றத்தை மாற்றி அமைப்பது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பும் வேறு கார்களை வித்தியாசமாக வடிவமைத்து அசத்தி இருக்கிறார். அண்மையில், பைக் எஞ்ஜினை வைத்து ஜீப் நிறுவன காரை உருவாக்கினார். அந்த வகையில் இப்போது ஹதிஃப் வடிவமைத்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் மாடல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

மாருதி சுஸுகி 800 மாடல் காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து அதனை ரோல்ஸ் ராய்ஸ் கார் போல உருமாற்றி இருக்கிறார். இந்தக் காரை உருவாக்கியது எப்படி என்பதை விளக்கும் வீடியோவை ஒன்றையும் ஹதிஃப் வெளியிட்டிருக்கிறார். வீடியோவைப் பார்த்த அனைவரும் நம்பமுடியாத ஆச்சரியத்துடன் இளைஞரின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் மீது தீரா காதல் - சாமி தரிசனம் செய்ய 14 கோடி ரூபாய் கார் - மாஸாக வந்து இறங்கிய அனந்த் அம்பானி!

ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றத்தை அப்படி உருவாக்கி இருக்கும் ஹதிஃப், ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்பகுதியில் இருக்கும் 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி' (Spirit of Ecstasy) சிலையையும் வைத்து அசத்தி இருக்கிறார். இதனால் அவர் உருவாக்கியுள்ள கார் பார்த்தவுடன் அசல் ரோல்ஸ்ராய்ஸ் போலவே காட்சி அளிக்கிறது.

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் இருந்த சிலையை எடுத்து காரில் பொருத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெளிப்புறத்தில் மட்டும் காரின் தோற்றத்தை அவர் மாற்றவில்லை. காரின் உள்ளேயும் பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு காரில் உள்ளது போன்ற வசதிகளையும் சேர்த்து உருவாக்கியுள்ளார். உள்ளே இந்த மாற்றங்களைச் செய்வதற்காக  மாருதி சுசுகி 800 காரில் ஏற்கெனவே இருந்த பாகங்களை நீக்கி இருக்கிறார்.

வெளித்தோற்றம் மெட்டல் ஷீட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹெட்லைட், இன்டிகேட்டர் ஆகியவையும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டைலில் உள்ளன. புதிதாகச் சேர்த்த உள் பாகங்கள் அனைத்தையும் தானே தயாரித்து இணைத்துள்ளார். இப்படி சாதாரண மாருதி சுசுகி 800 காரை ரோல் ராய்ஸ் கார் போல மாற்றம் செய்ய இவருக்கு ஆன செலவு ரூ.45,000 மட்டுமே!

இப்படிப் பார்த்துப் பார்த்து மாற்றங்களைச் செய்த இவரது திறமையால் சாதாரண மாருதி சுசுகி 800 கார் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறியிருக்கிறது.

வெறும் ரூ.4 லட்சத்தில் சூப்பரான பஜாஜ் எலக்ட்ரிக் கார்.. இவ்வளவு அம்சங்கள் இருக்கா..!

click me!