
இந்தியாவில் இருசக்கர வாகன பயணிகள் எண்ணிக்கை மிக அதிகம். அதனால்தான் ஹெல்மெட் பயன்பாடு மிகவும் முக்கியமானது. ஹெல்மெட் சந்தையில் முன்னணியில் இருப்பது Studds நிறுவனம். தரமான தயாரிப்புகள் மற்றும் மலிவான விலையில் கிடைப்பதால், இந்த பிராண்டு தற்போது உலகளவில் கூட பிரபலமாகியுள்ளது.
Studds ஹெல்மெட்கள் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. Full Face, Open Face, Flip-Up, Off-Road போன்ற மாடல்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளன. ஒவ்வொரு மாடலும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் இருசக்கர வாகன பயணிகளுக்கு அதிக நம்பிக்கை தருகின்றன.
பாதுகாப்புடன் சேர்த்து, ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் நிற விருப்பங்களும் Studds ஹெல்மெட்களில் கிடைக்கின்றன. குறிப்பாக இளம் தலைமுறையை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான கலர்ஸ், கிராஃபிக்ஸ் கொண்ட ஹெல்மெட்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலையைப் பற்றி பார்க்கும்போது, Studds ஹெல்மெட்கள் ரூ.900 முதல் ரூ.2,000 வரை கிடைக்கின்றன. தரமும் விலையும் சமநிலையில் இருப்பதால், சாதாரண பயணிகளுக்கும் எளிதில் வாங்கக்கூடியதாக உள்ளது. மேலும், ISI சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு ஹெல்மெட்கள் என்பதால், பயணத்தில் நிம்மதியாக பயன்படுத்தலாம்.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் Studds ஹெல்மெட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாதுகாப்பு + டிசைன் + விலை என்ற மூன்றையும் ஒருங்கே வழங்குவதால், Studds தற்போது ஹெல்மெட் மார்க்கெட்டில் முன்னணியில் நீடித்து வருகிறது.