Maruti Suzuki CNG: ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் CNG கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்!

Published : Sep 21, 2026, 08:59 AM IST
Maruti Suzuki CNG: ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் CNG கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்!

சுருக்கம்

பெட்ரோல் விலை அதிகமா இருக்கறதால CNG கார் வாங்க பிளான் பண்றீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் சாய்ஸ் வந்திருக்கு. பட்ஜெட் விலையில ஆட்டோமேட்டிக் கியர் வசதியோட புது கார்கள் அறிமுகமாகியிருக்கு.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிட்டே போகுது. எலக்ட்ரிக் கார்கள் வாங்கலாம்னா ஆரம்ப விலையே ரொம்ப அதிகமா இருக்கு. இதனால, நிறைய பேர் சுற்றுச்சூழலுக்கு உகந்த, மெயின்டனன்ஸ் செலவு குறைவான CNG கார்களை வாங்க ஆர்வம் காட்டுறாங்க. இப்போ CNG கார் வாங்குற வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் ஆஃபர் வந்திருக்கு. மாருதி சுஸுகி நிறுவனம் தங்களோட ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் CNG மாடல்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT) வசதியை கொடுத்திருக்காங்க.

CNG மாடல்களின் விலை விவரம்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் கார்களின் CNG மாடல்களில் ஆட்டோமேட்டிக் கியர் வசதி கிடைக்குது. இந்த கார்களின் ஆரம்ப விலை 7.92 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்).

மூன்று CNG கார்களின் விலை பட்டியல்:

  • மாருதி ஸ்விஃப்ட் CNG: 7.92 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
  • மாருதி பலேனோ CNG: 8.32 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
  • மாருதி டிசையர் CNG: 8.53 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

மார்க்கெட்ல பல பிராண்டுகளில் CNG கார்கள் இருக்கு. ஆனா, பெரும்பாலான CNG கார்களில் ஆட்டோமேட்டிக் கியர் வசதி கிடையாது. இப்போ மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் CNG மாடல்ல ஆட்டோமேட்டிக் வசதியை அறிமுகம் செஞ்சிருக்காங்க. இது வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப ஈஸியான, வசதியான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும். சிட்டி டிராஃபிக்ல கிளட்ச்சை பிடிச்சு பிடிச்சு கால் வலிக்க வேண்டியதில்லை. CNG மாடலிலும் இப்போ ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்குது.

Best Electric Scooter: ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. போகலாம்.. தினமும் ஆபிஸ் செல்வோருக்கு செம்ம ஸ்கூட்டர்

இந்த மூணு கார்களிலுமே 1197cc இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கு. இதுல டூயல் VVT டெக்னாலஜி இருக்கு. 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுத்திருக்காங்க. இந்த CNG மாடல் 68.8hp பவர் மற்றும் 101.8Nm பீக் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஸ்விஃப்ட் CNG கார் ஒரு கிலோவுக்கு 35.34 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும். பலேனோ CNG கார் ஒரு கிலோவுக்கு 34.47 கிலோமீட்டர் மைலேஜ் தரும். அதேபோல, டிசையர் கார் 36.47 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும்னு சொல்லப்பட்டிருக்கு.

சமீப காலமா CNG கார்களுக்கான டிமாண்ட் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. மாருதி சுஸுகி நிறுவனத்தோட விற்பனை 58 சதவீதம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு. ஜூலை 2026-ல் ஒரே மாசத்துல 83,000 மாருதி CNG கார்கள் விற்பனையாகியிருக்கு. CNG கார்களுக்கு டிமாண்ட் அதிகமா இருக்கறதாலதான், மாருதி சுஸுகி நிறுவனம் இப்போ AMT வசதியை கொடுத்திருக்காங்க.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Best Electric Scooter: ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. போகலாம்.. தினமும் ஆபிஸ் செல்வோருக்கு செம்ம ஸ்கூட்டர்
Second Hand Car : செகண்ட் ஹேண்ட் கார் வாங்குறீங்களா? எந்த காரை வாங்கலாம், எங்கே வாங்கலாம், எதை எல்லாம் செக் பண்ணணும்?