முதல் முறையாக 5 கதவுகளுடன் அசத்தும் மாருதி ஜிம்னி! இந்தியாவில் 6 மாடல்களில் விற்பனை!

By SG BalanFirst Published Jun 7, 2023, 5:59 PM IST
Highlights

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ஜிம்னி இந்தியாவில் 12.74 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதியின் ஜிம்னி (Jimny SUV) சொகுசு கார் விலையை அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. ஆறு வகைகளில் விற்பனைக்கு வரும் இந்த காரின் அடிப்படை மாடலின் விலை  ரூ.12.74 லட்சம் தொடங்குகிறது. ஜிம்னியின் அதிகபட்ச விலை கொண்ட மாடலான ஜிம்னி ஆல்பா ஏடி (டூயல் டோன்) ரூ.15.05 லட்சம் விலை கொண்டது.

மாருதி இதன் மூலம் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்ஸ் கார் துறையில் நற்பெயரை நிலைநிறுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கிறது. இந்தப் பிரிவில் உள்ள பிரெஸ்ஸா, ஃபிராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற பிற மாடல்களுடன் ஜிம்னியும் இடம்பிடிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா!

ஜிம்னி 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய சந்தா திட்டம் மூலமாகவும் இந்தக் காரை வாங்கலாம். இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர தவணையாக ரூ.33,550 செலுத்த வேண்டும். மாருதி விலை பட்டியலின் படி, ஜிம்னி கார் Zeta MT (ரூ. 12.74 லட்சம்), Zeta AT (ரூ. 13.94 லட்சம்), Alpha MT (ரூ. 13.69 லட்சம்), Alpha AT (ரூ. 14.89 லட்சம்) ஆகிய மாடல்களில் கிடைக்கும். இது தவிர இரண்டு டூயல் டோன் மாடல்கள் உள்ளன. அவை, Alpha MT (ரூ. 13.85 லட்சம்) மற்றும் ஆல்பா AT (ரூ. 15.05 லட்சம்).

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) மூத்த செயல் அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, ஜிம்னி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், "ஒட்டுமொத்தமான மாருதி பிராண்டைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான தயாரிப்பு. ஜிம்னி ஒரு திறமையான கார். எனவே இது நாட்டின் ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் நிச்சயம் உதவும்" என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐந்து கதவுகள் கொண்ட காரை உருவாக்க மாருதி ₹960 கோடி முதலீடு செய்துள்ளது. சுசுகி உலகளவில் 199 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான ஜிம்னியை விற்பனை செய்துள்ளது. உலக அளவில் மூன்று கதவு உள்ளமை மாடலையே விற்பனை செய்துள்ளது. ஐந்து கதவு கொண்ட மாடலை விற்பனைக்குக் கொண்டுவருவது இதுவே முதல் முறை.

ஹிட்லருக்கு காதலி கொடுத்த பென்சில்! சொற்ப தொகைக்கு விலைபோனதால் ஏமாற்றம்!

click me!