இந்தியாவில் செயல்பட்டு வரும், பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள், புதிதாக எலக்ட்ரிக் வகை வாகனங்களை வெளியிட துவங்கியுள்ளனர். முன்பெல்லாம் நமது தமிழக சாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டு வந்த எலக்ட்ரிக் வாகனங்கள், இப்பொது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் வகையில் வருகின்ற 2026 வாக்கில், பிரபல ராயல் என்பீல்ட் நிறுவனம், எலக்ட்ரிக் பைக்களை வெளியிடவுள்ளது தெரிவித்தது. அதே போல பிரபல மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில் தங்களிடம் பிரபலமாக விற்பனையாகும் Thar மாடல் கார்களில் மின்சார ரகத்தை வெளியிடுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
தற்போது அந்த புது வகை கார், Thar.e என்று பெயரிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கான்செப்ட் வகை வெர்சனை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறும் 'பியூச்சர்ஸ்கேப்' என்ற நிகழ்வில் வெளியிட உள்ளது அந்த நிறுவனம்.
undefined
மேலும் இந்த ஈவெண்ட்டில் மஹிந்திரா நிறுவனம் ஒரு உலகளாவிய டிராக்டர் இயந்திரத்தையும், ஒரு பிக்-அப் டிரக் மாதிரியையும் வெளியிடவுள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த புது ரக Thar.e காரை பற்றி பெரிய அளவில் தகவல்களை வெளியிட முடியவில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
HT ஆட்டோவின் கூற்றுப்படி, Thar வகை காரின் ஆஃப்-ரோடிங் தன்மை மற்றும் நான்கு சக்கர இயக்கி திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் இரட்டை மோட்டார் பயன்படுத்தும் முறை பொருத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அமைப்பானது முன் அச்சில் ஒரு மோட்டாரையும், பின்புறத்தில் மற்றொன்றையும் உள்ளடக்கி, செயல்திறன் மற்றும் வண்டியின் இழுவையை அதிகரிக்கும். ஆனால் ஆல் வீல் டிரைவ் கொண்ட செயல்திறன் இதில் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆகவே நிச்சயம் இந்த புதிய மஹிந்திரா thar.e ரக கார்களில் ஆள் வீல் டிரைவ் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
MG நிறுவனத்தின் Comet EV மாடல் கார்.. வெளியாகும் புதிய Gamer Edition - ஆனா ரேட் கொஞ்சம் அதிகம்!