அதிரி புதிரி சேல்ஸ்... எல்லாரும் தேடிப் போய் வாங்குற எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா!

By SG Balan  |  First Published Feb 19, 2024, 4:01 PM IST

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் MG ZS EV எலெக்ட்ரிக் காருக்கும் ஹூண்டாய் கோனா கடுமையான போட்டியாக இருந்துவருகிறது. 


ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா (Hyundai Kona EV) இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. கடந்த ஜனவரி மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் 102 கோனா எலெக்ட்ரிக் கார்களை விற்றிருப்பதாகக் கூறியுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார இப்போது இந்தியாவில் ரூ.23.84 லட்சம் (எக்ஸ்-ஷோரும்) ஆரம்ப விலையில் விற்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 40 ஆக இருந்த கோனா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை 155 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

கோனா எலெக்ட்ரிக் காரில் உள்ள 39.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கி.மீ. தூரம் பயணம் செய்ய முடியும் என்று ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. இதனால், எலெக்ட்ரிக் கார்களில் சிறப்பான ரேஞ்ச் கொடுக்கும் கார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

போயிங் 737 விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்! அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் வெறும் 57 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு அம்சம். 7.2 kW AC சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 6 மணிநேரம் ஆகும் என்பதும் கவனிக்கவேண்டியதுதான்.

இருந்தாலும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் MG ZS EV எலெக்ட்ரிக் காருக்கும் ஹூண்டாய் கோனா கடுமையான போட்டியாக இருந்துவருகிறது. MG ZS EV ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.08 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.

ஓரளவுக்கு டாடா நெக்ஸான் (Tata Nexon EV) காருக்கும் ஹூண்டாய் கோனா விற்பனையில் சவால் விடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களிடம் அதிகரித்துவரும் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கும் அதிக சலுகைகள் கிடைக்கின்றன. புதிய மாடல்களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருப்பதால் புது கார் வாங்க நினைப்பவர்களுக்கு சாய்ஸ் அதிகமாக இருக்கிறது.

எலக்ட்ரிக் கார் விலை இவ்ளோ குறைஞ்சிருச்சா! புதுசா கார் வாங்குறவங்களுக்கு நிறைய ஆப்ஷன் இருக்கு!

click me!