
பழைய காரை விற்றுவிட்டு, ஆர்.சி. புத்தகம் மற்றும் மற்ற ஆவணங்கள் அனைத்தையும் புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்றிவிட்டால் வேலை முடிந்தது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அங்குதான் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். அதுதான் உங்கள் காரில் இருந்த ஃபாஸ்ட்டேக்கை (FASTag) செயல்படாமல் செய்வது. இதை நீங்கள் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தேவையில்லாமல் பணம் போய்க்கொண்டே இருக்கும்.
நீங்கள் காரை விற்ற பிறகும், அதில் இருக்கும் ஃபாஸ்ட்டேக் செயல்பாட்டில் இருந்தால், அந்த காரின் புதிய உரிமையாளர் டோல்கேட் வழியாக செல்லும்போது, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்துதான் சுங்கக் கட்டணம் கழிக்கப்படும். இப்படித் தொடர்ந்து பணம் கழிக்கப்பட்ட பிறகுதான், பலருக்கும் தன்னுடைய ஃபாஸ்ட்டேக் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது என்ற விஷயமே தெரியவரும்.
ஃபாஸ்ட்டேக் என்பது காரின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு ஸ்டிக்கர் ஆகும். இதில் ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பம் (RFID) இருக்கும். இந்தத் டேக், உங்கள் வங்கிக் கணக்கு அல்லது ஃபாஸ்ட்டேக் வாலட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். வாகனம் சுங்கச்சாவடி வழியாக செல்லும்போது, அங்குள்ள ஸ்கேனர் இந்தத் டேக்கை ஸ்கேன் செய்து, சுங்கக் கட்டணத்தை தானாகவே உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும்.
நீங்கள் காரை விற்ற பிறகும் ஃபாஸ்ட்டேக்கை செயல்படாமல் செய்யவில்லை என்றால், இந்த அமைப்பு அப்படியேதான் வேலை செய்யும். அதனால், புதிய உரிமையாளர் செய்யும் பயணங்களுக்கு எல்லாம் உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட வாய்ப்புள்ளது.
Cheapest Family Car: கம்மி விலையில் 5 சீட்டர் கார்! 6 ஏர்பேக், 33.85 கிமீ மைலேஜ்.. விலை இவ்வளவு தானா
கார் விற்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் தனது வாகனத்தை விற்றாலோ அல்லது கைமாற்றினாலோ, பழைய உரிமையாளர் உடனடியாக ஃபாஸ்ட்டேக் வழங்கிய வங்கியிடம் பேசி, அந்த ஃபாஸ்ட்டேக் கணக்கை அல்லது பணப்பையை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, புதிய உரிமையாளர் தனது பெயரில் ஒரு புதிய ஃபாஸ்ட்டேக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஃபாஸ்ட்டேக்கில் மீதமுள்ள பணம் இருந்தால்?
ஃபாஸ்ட்டேக்கை செயல்படாமல் செய்வதற்கு முன்பு, உங்கள் அக்கண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதைச் சரிபாருங்கள். கணக்கில் பணம் மீதம் இருந்தால், அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்று சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேளுங்கள். ஒவ்வொரு வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து, பணத்தைத் திரும்பக் கொடுக்கும் நடைமுறை மாறுபடலாம்.
அதனால், ஃபாஸ்ட்டேக் கணக்கை மூடுவதற்கான விண்ணப்பம் கொடுக்கும்போதே, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
CNG Cars: பெட்ரோல் கார்களுக்கு செக்! கியா, ஹூண்டாய், டாடா களமிறக்கும் புதிய சிஎன்ஜி கார்கள்
ஃபாஸ்ட்டேக்கை செயல்படாமல் செய்வது எப்படி?
முதலில், உங்கள் ஃபாஸ்ட்டேக்கை எந்த வங்கி வழங்கியது என்று பாருங்கள். பிறகு, அந்த வங்கியின் கஸ்டர் கேர் எண்ணுக்குத் தொடர்புகொண்டோ அல்லது ஆன்லைன் ஃபாஸ்ட்டேக் தளம் மூலமாகவோ கணக்கை மூடுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
காரை விற்றுவிட்டதாகவும், ஃபாஸ்ட்டேக் கணக்கைச் செயல்படாமல் செய்ய வேண்டும் என்றும் வங்கியிடம் தெளிவாகச் சொல்லுங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், வாகனப் பதிவு எண் போன்ற விவரங்களை வங்கி கேட்கும். அனைத்தையும் சரிபார்த்த பிறகு, உங்கள் ஃபாஸ்ட்டேக்கைச் செயல்படாமல் செய்துவிடுவார்கள்.
விண்ணப்பம் அளித்த பிறகு, உங்கள் ஃபாஸ்ட்டேக் செயலிழந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை வங்கி மூலமாக இந்தச் சிக்கல் சரியாகவில்லை என்றால், ஃபாஸ்ட்டேக் தொடர்பான புகார்களுக்கும் உதவிக்கும் இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தின் (IHMCL) உதவி மையத்தை அணுகலாம்.