பிரீமியம் பைக் செக்மெண்ட் இன்றைய இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. பண்டிகை காலத்தில் ஏதேனும் புதிய பொருட்களை இந்தியர்கள் வாங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த தீபாவளிக்கு புதிய பைக் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்திய இரு சக்கர வாகன சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பைக்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, பிரீமியம் செக்மெண்ட் பைக்குகள். இன்றைய இளைஞர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பிரீமியம் பைக் செக்மெண்ட் பெற்றுள்ளதால், பண்டிகை காலத்தில் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அந்தவகையான இரு சக்கர வாகனங்கள் பற்றி இங்கு காணலாம்.
KTM 390 Adventure X
KTM 390 அட்வென்ச்சர் எக்ஸ் விலை ரூ. 2.81 லட்சம். இதன் 373cc சிங்கிள்-சிலிண்டர் மோட்டாரானது 42.9bhp மற்றும் 37Nm ஆற்றலை வழங்குகிறது. இந்தியாவில் KTM இன் பெரிய திறன் கொண்ட சாகச பைக்கான இது, 6 ஸ்பீடு கியர்பாகஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்இடி வெளிச்சம், முழு டிஜிட்டல் எல்சிடி மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. சுற்றுலா மற்றும் ஆஃப்-ரோடு மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டில் பல ஆண்டுகளாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
TVS Apache RTR 310
TVS Apache RTR 310 மிகவும் சக்திவாய்ந்த, ஏராளமான அம்சங்கள் கொண்ட பைக்காகும். முற்றிலும் புதிய வடிவமைப்பான இந்த பைக்கில், பூமராங் போன்ற பேனல்களுடன் சிங்கிள் பாட் ஹெட்லைட் உள்ளது. மேலும், GoPro கட்டுப்பாடுகள், இசை மற்றும் தொலைபேசி கட்டுப்பாடு, ஸ்மார்ட் ஹெல்மெட் சாதன இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்ட ஐந்து அங்குல TFT என பல அம்சங்கள் உள்ளன. நகர்ப்புறம், மழைக்காலம், விளையாட்டு, டிராக் மற்றும் சூப்பர்மோட்டோ ஆகிய ஐந்து விதமான ரைடு மோட்கள் உள்ளன. 312.2cc, லிக்விட்-கூல்டு மோட்டாருடன் வரும் TVS Apache RTR 310, 9,700rpm இல் 35.08bhp மற்றும் 6,650rpm இல் 28.7Nm ஆற்றலை வழங்குகிறது. இதன் விலை ரூ. 2.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
Harley-Davidson X440
நீங்கள் பிரீமியம் செக்மெண்ட்டில் ஒரு க்ரூஸர் மோட்டார்சைக்கிளை தேடுபவர் என்றால், ஹார்லி-டேவிட்சன் X440 உங்களுக்கான தேர்வாக இருக்கலாம். புதிய ஹார்லி டேவிட்சன் X440 பைக்கானது Denim, Vivid மற்றும் S ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. Denim வகை ரூ. 2.29 லட்சம், Vivid வகை ரூ.2.49 லட்சம், S வகை ரூ.2.69 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம். டயமண்ட்-கட் அலாய் வீல்கள், 3D பேட்ஜிங், புளூடூத் வசதி, LED இண்டிகேட்டர்கள் உள்ளன.
வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள், ஹார்லி டேவிட்சன் பிரான்டிங் செய்யப்பட்டு சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபிலாட் ஹேன்டில்பார், யூ.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வசதிகள் உள்ளன. ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட air/oil-cooled சிங்கிள்-சிலிண்டர், 440சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 27 bhp ஆற்றலையும், அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 38 NM விசையையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, X440 முன்பக்கத்தில் 43mm தலைகீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் இரட்டை ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களையும் கொண்டுள்ளது.
முற்றிலும் புதிய முரட்டு லுக்கில் Renault Duster.. லான்ச் தேதி Locked - என்னென்ன அம்சங்கள் இருக்கு?
Triumph Speed 400
300-400cc பிரிவில் மற்றொரு புதிய வரவு ட்ரையம்ப் ஸ்பீடு 400 ஆகும். இதன் விலை ரூ.2.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்எம் ஆற்றலை வழங்கும் 399சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. சஸ்பென்ஷன் மற்றும் ஒட்டுமொத்த கையாளுதலும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரையம்ப் ஸ்பீட் 400ஐ ஒற்றை மாறுபாடு மற்றும் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
Hero Karizma XMR
210cc லிக்விட்-கூல்டு மோட்டாருடன் வரும் Hero Karizma XMR 25.15bhp மற்றும் 20.4Nm ஆற்றலை வழங்குகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும் இந்த பைக்குகள் ஒரு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. மூன்று வண்ணங்களில் வரும் கரிஸ்மா எக்ஸ்எம்ஆரின் விலை ரூ.1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.