BYD Seal : பிரபல BYD நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வகை SEAL என்ற காரை இப்பொது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பிரபல BYD நிறுவனம், Seal என்ற எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, டாப்-ஸ்பெக் செயல்திறன் கொண்ட AWD வேரிஎண்ட் e6 MPV மற்றும் Atto 3 SUV-களுக்குப் பிறகு இந்தியாவில் களமிறங்கும் சீன கார் தயாரிப்பாளரின் மூன்றாவது மாடல் இந்த சீல் ஆகும். மக்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BYD ஆனது ரூ.1.25 லட்சத்திற்கான டோக்கன் தொகைக்கு தங்களது SEAL கார்களுக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. மேலும் மார்ச் 31, 2024க்கு முன் முன்பதிவு செய்பவர்கள், ஹோம் சார்ஜர், 3kW போர்ட்டபிள் சார்ஜிங் பாக்ஸ் மற்றும் 6 வருட சாலையோர உதவி போன்ற சில கூடுதல் சேவைகளைப் பெறுகிறார்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
undefined
ரூ.260 கோடி காருக்குள் ஒரு சொர்க்கம்! புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா டிராப்டெய்ல் அறிமுகம்!
SEAL இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் கிடைக்கிறது - 61.44kWh மற்றும் 82.56kWh. இரண்டு பேட்டரிகளும் BYDன் காப்புரிமை பெற்ற பிளேடு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. சிறிய பேட்டரி பேக் பின்புற அச்சில் 204hp மற்றும் 310Nm டார்க்கை உருவாக்கும் ஒற்றை மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 510km (NEDC சுழற்சி) வரம்பைக் கொண்டுள்ளது.
இந்த கார் தயாரிப்பாளர் SEAL காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள்/1,60,000 கிமீ வாரண்டியையும், மோட்டார் மற்றும் மோட்டார் கன்ட்ரோலர் யூனிட்டில் 8 ஆண்டுகள்/1,50,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது. இந்திய சந்தையில் சுமார் 41 லட்சத்திற்கு விற்பனையாகும் என்றும், மேலும் அதன் விலை 53 லட்சம் வரை செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்.. அதிக மைலேஜ் கொடுக்கும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..