இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கான நடைமுறைகள் என்னென்ன? எந்த வயதினருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்? தகுதிகள் என்னென்ன? கட்டணம் என்ன? அபராதம் என்ன? போன்றவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனாலும், நாட்டின் சிறிய கிராமங்களில் சிறுவர்கள் கூட வாகனங்களை ஓட்டுகின்றனர். இது மிகவும் தவறு என்பதை பெற்றோரும் உணருவதில்லை. லைசென்ஸ் என்பது சட்டப்படி உரிமையானது. லைசென்ஸ் வைத்திருக்கவில்லை என்பது இந்திய தண்டனை சட்டத்திற்கு உட்பட்டது.
இந்தியாவில் வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஓட்டுநர் உரிமங்கள்:
கற்றல் உரிமம்: இந்தியாவில், வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் உரிமம் இது. ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் இந்த உரிமம் முடிந்த பின்னர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர ஓட்டுநர் உரிமம்: RTO நடத்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த் உரிமம் வழங்கப்படுகிறது. இதை வைத்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட வகை வாகனத்தை ஓட்ட அனுமதிக்கிறது.
வணிக ஓட்டுநர் உரிமம்: லாரிகள், பேருந்துகள், டாக்சிகள் போன்ற பொது சேவைகளுக்கான வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு இந்த வகை உரிமம் வழங்கப்படுகிறது.
சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP): வெளிநாடுகளில் வாகனம் ஓட்டுவதற்கு இந்த உரிமம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த வகை வாகனம் வைத்திருப்பவர்களுக்கு எந்த லைசென்ஸ் என்று பார்க்கலாம்:
நிரந்தர ஓட்டுநர் உரிமம்:
MC 50CC (Motorcycle 50CC) - மோட்டார் திறன் 50CC அல்லது அதற்கு குறைவான திறன் கொண்ட வாகனங்கள்
MCWOG/FVG - எந்த இன்ஜின் வகையாக இருந்தாலும் சரி, ஆனால், கியர் இல்லாதது மொபெட் மற்றும் ஸ்கூட்டர் உள்பட
LMV-NT - போக்குவரத்து அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் இலகுரக மோட்டார் வாகனங்கள்
MC EX50CC - கியர் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், 50CC அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உட்பட இலகுரக மோட்டார் வாகனங்கள் (LMV)
கியர் கொண்ட MC அல்லது M/CYCL.WG கியர் கொண்ட அனைத்து மோட்டார் சைக்கிள்கள்
கமர்ஷியல் வாகனங்களுக்கு:
MGV நடுத்தர சரக்கு வாகனங்கள்
LMV மோட்டார் கார்கள், ஜீப்புகள், டாக்சிகள், டெலிவரி வேன்கள் உள்ளிட்ட இலகுரக மோட்டார் வாகனங்கள்
HMV கனரக மோட்டார் வாகனங்கள்
HGMV கனரக பொருட்கள் கொண்டு செல்லும் மோட்டார் வாகனம்
HPMV/HTV கனரக பயணிகள் மற்றும் கனரக போக்குவரத்து வாகனம்
டிரெய்லர் போன்ற கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபர் கனரக டிரெய்லர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கான வயது தகுதி மற்றும் அளவுகோல்கள்:
50cc வரை இயந்திர திறன் கொண்ட கியர்கள் இல்லாத வாகனங்கள் - 16 வயது இருக்க வேண்டும், பெற்றோரின் ஒப்புதல் தேவை
கியர்கள் கொண்ட வாகனங்கள் - 18 வயது நிரம்பியவர் போக்குவரத்து விதிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
வணிக வாகனங்கள் - 20 வயது (சில மாநிலங்களில் 18 வயது) நிரம்பியவர், 8 ஆம் வகுப்பு வரை முறையான கல்வியை முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசுடன் இணைக்கப்பட்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை:
வயதுச் சான்று: பிறப்புச் சான்றிதழ், பள்ளி இறுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட், பான் கார்டு தேவை
அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை.
முகவரிச் சான்று: வீட்டு முகவரி, மின்சாரக் கட்டணம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை.
தேவைப்படும் பிற ஆவணங்கள்:
டிரைவிங் பழகும்போது உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
விண்ணப்பக் கட்டணம்:
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாகும்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி
நீங்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். நடைமுறை என்ன?
ஆன்லைன் நடைமுறை:
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
1: https://parivahan.gov.in/parivahan//en தளத்திற்கு செல்ல வேண்டும்
2: 'ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்' என்பதை கிளிக் செய்தா பின்னர் 'ஆன்லைன் சேவைகள்' என்பதன் கீழ் விருப்பத்தை தேர்வு செய்யவும்
3: மாநிலத்தை தேர்வு செய்யவும்
4: 'ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும்' என்பதை கிளிக் செய்யவேண்டும்
5: 'தொடரவும்' என்பதை கிளிக் செய்யவும்.
6: தற்போது விண்ணப்பத்தை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வில் பங்கேற்க ஒரு இடத்தை முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும்.
7: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதி மற்றும் நேரத்தில் RTO அலுவலகத்திற்கு அலுவலரை சந்திக்கக் வேண்டும்
8: நீங்கள் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உரிமம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.
குறிப்பு: புதிய விதியின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலும் தங்கள் ஓட்டுநர் தேர்வை முடிக்கலாம். RTO-வில் ஓட்டுநர் தேர்வை எழுதுவது இனி கட்டாயமில்லை.
ஆஃப்லைன் நடைமுறை:
ஓட்டுநர் உரிமத்திற்கு ஆஃப்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
1: இந்திய ஓட்டுநர் உரிமப் படிவமான விண்ணப்ப படிவத்தைப் பெறுங்கள் (கற்றல் உரிமத்திற்கான படிவம் 1 மற்றும் நிரந்தர உரிமத்திற்கான படிவம் 4). இந்தப் படிவம் மாநில போக்குவரத்து இணையதளத்திலோ அல்லது அருகிலுள்ள RTO அலுவலகத்திலோ ஆன்லைனில் கிடைக்கும்.
2: படிவத்தை நிரப்பி, வயது மற்றும் முகவரிக்கான சான்றுகளுடன் உங்கள் பகுதியில் உள்ள RTO அலுவலகத்திற்கு சென்று வழங்கவும். உங்கள் ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கான தேதியை RTO அதிகாரிகளிடமிருந்து கோரவும், அதனுடன் தொடர்புடைய கட்டணத்தை செலுத்தவும்.
3: திட்டமிடப்பட்ட நேரம் மற்றும் தேதிக்குள் ஓட்டுநர் உரிம சோதனை இடத்திற்கு வந்து சேருங்கள். நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் உங்கள் ஓட்டுநர் உரிமம் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் டிரைவிங் பழகும் பள்ளியில் உள்ள ஊழியர்கள் நீங்கள் உரிமம் பெற உதவ முடியும்.
இந்தியாவில் டிரைவிங் உரிமத்துக்கான கட்டணங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் சரிபார்க்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றவும்:
1: https://parivahan.gov.in/parivahan//en தளத்திற்கு செல்லவும்
2: 'ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்' கிளிக் செய்து, ஆன்லைன் சேவையின் கீழ் விருப்பத்தை தேர்வு செய்யலாம்
3: மாநிலத்தை தேர்வு செய்யவும்
4: 'விண்ணப்ப நிலை' என்பதை கிளிக் செய்யவும்.
5: விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிடவும்.
6: 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யதால், விண்ணப்பத்தின் நிலை தெரியும்
இதற்கு பதிலாக உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நிலையை சரிபார்க்க அருகிலுள்ள RTO அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு நடைமுறை
இரு சக்கர வாகனங்களுக்கு:
இரு சக்கர வாகன டிரைவிங் கற்றல் உரிமத் தேர்வுக்கு, பொதுவாக எண் 8 போன்ற வடிவிலான மிதிவண்டியை இயக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் தேர்வுக்கான ஒரு சோதனையாகும். விண்ணப்பதாரர் தரையில் கால் வைக்காமல் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இதை நிறைவேற்ற வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு:
விண்ணப்பதாரர் எண் 8 வடிவத்தில் வாகனத்தை இயக்கி காட்ட வேண்டும். இந்தத் தேர்வில், முன், பின் செல்லும் திறன், பார்க்கிங் செய்வது, கண்ணாடி பார்த்து ஓட்டுவது, கியர்கள் இயக்குவது, பிரேக் பிடிப்பது ஆகியவை சோதிக்கப்படும்.
இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி
இந்திய சாலைப் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) வழங்குகிறது. ஆவணம் செல்லுபடியாகும் பட்சத்தில் எந்த வெளி நாட்டிலும் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு சாலைகளில் பயணிக்கும்போது, உங்கள் அசல் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) உங்களுடன் இருப்பது கட்டாயம்.
ஓட்டுநர் உரிமம் குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒருவர் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க வேண்டுமா?
ஆம், எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் . சாலையில் வாகனம் ஓட்ட உங்களை அனுமதிக்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும்.
ஓட்டுநர் உரிம விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் அணுக முடியுமா?
உங்கள் மாநிலத்தின் மோட்டார் வாகனத் துறை வலைத்தளம் மூலம் ஓட்டுநர் உரிம விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பெறலாம்.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் அதிகாரிகளால் பிடிபடுவதும் அபராதம், சிறைத்தண்டனை மற்றும் வாகன பறிமுதல் செய்யப்படலாம். கூடுதலாக, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உங்கள் மோட்டார் காப்பீட்டுத் தொகையை ரத்து செய்யலாம்.
நிரந்தர ஓட்டுநர் உரிமம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
பரிவஹான் போர்ட்டலில் ஓட்டுநர் உரிமத்தின் விண்ணப்ப நிலையை கண்காணிக்கலாம்.
ஓட்டுநர் உரிம எண்ணில் என்ன இருக்கிறது?
ஒவ்வொரு ஓட்டுநர் உரிமத்திலும் மாநிலப் பெயர், கிளைக் குறியீடு, வழங்கப்பட்ட ஆண்டு மற்றும் ஓட்டுநர் சுயவிவர ஐடி அதாவது 13 எழுத்துகள் கொண்ட எண் உள்ளது.
ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயமா?
ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு என்ன தண்டனை?
முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 வரை அபராதம், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஓட்டுநர் உரிமத்தில் எனது முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியுமா?
உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உங்கள் முகவரியை ஆன்லைனில் மாற்ற முடியாது, ஆனால் முகவரி மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் சரிபார்ப்புக்காக பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தை (RTO) தொடர்பு கொள்ளலாம்.
இந்திய ஓட்டுநர் உரிமத்தை வேறொரு நாட்டில் ஓட்டுவதற்கு பயன்படுத்த முடியுமா?
இந்திய ஓட்டுநர் உரிமத்தை வேறொரு நாட்டில் ஓட்டுவதற்குப் பயன்படுத்த முடியாது. இதற்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதியைப் பெற வேண்டும்.
இந்தியாவில் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தைப் பெற எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், நீங்கள் வழங்கிய முகவரிக்கு 30 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பெறலாம். ஆனால், தற்போது இரண்டு நாட்களில் கிடைத்து விடுகிறது.
ஓட்டுநர் உரிமத்திற்கு நான் எப்படி விண்ணப்பிப்பது?
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, நீங்கள் குறைந்தது 18 வயது நிரம்பிஇருக்க வேண்டும்.