
அடுத்த ஆண்டு இந்திய நடுத்தர எஸ்யூவி (மிட்-சைஸ் எஸ்யூவி) பிரிவில் பல புதிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன. மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் எஸ்யூவி மாடல்களுடன் உள்ளன. மாடர்ன் டிசைன், அதிக ரேஞ்ச், நவீன பாதுகாப்பு தொழில்நுட்பம், பிரீமியம் அம்சங்கள் ஆகியவை முக்கிய ஹைலைட்ஸ்.
புதிய டாடா சியரா
பிரபலமான டாடா சியரா மீண்டும் வர உள்ளது. நவம்பர் 25 அன்று அறிமுகம். இது பெட்ரோல் மற்றும் EV இரு விருப்பங்களிலும் வரும். ICE மாடலில் 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜின் – 168 PS பவர், 280 Nm டார்க். EV ரேஞ்ச் 500+ கி.மீ. என எதிர்பார்ப்பு. முதலில் பெட்ரோல், பின்னர் 2026 தொடக்கத்தில் EV மாடல் வரலாம்.
மாருதி சுசுகி இ-விட்டாரா
மாருதியின் முதல் முழு எலக்ட்ரிக் எஸ்யூவி e-விட்டாரா, டிசம்பரில் அறிமுகமாகும். இது டொயோட்டா கூட்டாண்மை EV பிளாட்போர்மில் வரும். இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வரும் e-விட்டாராவின் மேல் மாடல் 500 கி.மீ.க்கும் அதிக ரேஞ்ச் உள்ளது. இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் ஒரே நேரத்தில் விற்கும் திட்டம் உள்ளது.
மஹிந்திரா XEV 9S
மஹிந்திரா தனது முதல் 7-சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இது நவம்பர் 27 அன்று ‘ஸ்க்ரீம் எலக்ட்ரிக்’ நிகழ்வில் வெளியாகிறது. இங்லோ EV பிளாட்போர்மில் உருவாகும் இந்த எஸ்யூவி 500 கி.மீ.க்கு மேல் ரெஞ்சுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அகல LED லைட்டுகள், ட்வின் பீக்ஸ் லோகோ, பனோரமிக் சன்ரூஃப், மூன்று ஸ்கிரீன்கள், Level-2 ADAS, டூ-வே சார்ஜிங் ஆதரவு ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
புதிய ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் டஸ்டர் முழு மாற்றத்துடன் இந்திய மார்க்கெட்டில் மீண்டும் வர உள்ளது. CMF-B பிளாட்போர்மில் உருவாகும் இந்த மாடல் சிறந்த கேபின் ஸ்பெஸ், புதிய இன்ஜின், மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும். முதலில் டர்போ பெட்ரோல்; பின்னர் ஹைப்ரிட் விருப்பமும் வரும். பெரிய டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும்.
2025–26 ஆம் ஆண்டில் நடுத்தர எஸ்யூவி பிரிவு மிகுந்த மாற்றம் காணப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மோடியான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் + சக்திவாய்ந்த பெட்ரோல் மாடல்கள் ஆகிய இரண்டின் கலவையைப் பெறுகின்றனர்.