
நாட்டின் பிரபலமான எஸ்யூவி பிராந்தான மஹிந்திரா & மஹிந்திரா, அக்டோபர் 2025 மாதம் தனது விற்பனை சாதனைகளை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நிறுவனம் 71,624 எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டது, இது இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும். மொத்த விற்பனை (உள்நாட்டு + ஏற்றுமதி) 120,142 யூனிட்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 26% அதிகம்.
விற்பனை வளர்ச்சி
நிறுவனத்தின் எஸ்யூவி வரிசைக்கு வலுவான தேவை உள்ளது. அக்டோபர் 2024-ல் விற்கப்பட்ட 54,504 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, 31% ஆண்டு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் (YTD) ஏப்ரல்-அக்டோபர் 2025 வரையிலான விற்பனை 17% வளர்ச்சியுடன் 369,194 யூனிட்களாக உள்ளது.
புதிய எஸ்யூவி மாடல்கள் அறிமுகம்
மஹிந்திரா தார், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் புதிய பதிப்புகள் விற்பனை வரிசையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது உள்ளன. பிஐ மற்றும் எக்ஸ்யூவி வரிசை எஸ்யூவிகளுக்கும் இந்தியாவில் அதிக தேவை உள்ளது. 2026-27 இந்தியாவில் 8 புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.
மொத்த வாகன விற்பனை
நிறுவனத்தின் விற்பனை குறித்து CEO நளினிகாந்த் கோலகுண்டா கூறினார், "அக்டோபரில் எங்கள் நிறுவனம் 71,624 யூனிட் எஸ்யூவி விற்பனையை எட்டியுள்ளது, இது 31% வளர்ச்சியாகும். மொத்த வாகன விற்பனை 120,142 யூனிட்கள், கடந்த ஆண்டை விட 26% அதிகம்."
வர்த்தக வாகன வளர்ச்சி
அக்டோபர் 2025-ல் 2T-க்குக் குறைவான LCV விற்பனை 16% உயர்ந்து 4,559 யூனிட்களாக இருந்தது. LCV 2T-3.5T பிரிவில் விற்பனை 14% வளர்ந்து 27,182 யூனிட்களாக உயர்ந்தது. YTD விற்பனை 13% அதிகரித்து 1,41,358 யூனிட்களாக உள்ளது.
மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்
மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 30% ஆண்டு வளர்ச்சி கொண்டது. அக்டோபர் 2024-ல் விற்கப்பட்ட 9,826 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, அக்டோபர் 2025-ல் 12,762 யூனிட்கள் விற்கப்பட்டன. இது மஹிந்திராவின் பல பிரிவுகளில் வலுவான விற்பனை நிலையை வெளிப்படுத்துகிறது.