வாராஹி அம்மனை இந்நாட்களில் வழிப்பட்டால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Sep 1, 2023, 6:25 PM IST

இத்தொகுப்பில் நாம் வாராஹியை எப்படி யாரெல்லாம் வழிபட வேண்டும். அவ்வாறு வழிப்பட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


வாராஹி அம்மனை சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடுகிறார்கள். மேலும் இனி எல்லாம் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி ஒருபோதும் திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருக்கும் போது வாராஹியை வழிபட்டால் உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

வாராஹி அம்மன்:
வாராஹி அம்மன் சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இவள் தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் உடையவள். மேலும் இவள் தாயை போன்ற இரக்கம் மற்றும் தயாள குணம் இருந்தாலும் இவளுக்கு மூர்க்க குணம் இருப்பதால் இவளை உக்ர தெய்வமாக கருதப்படுகிறார். இவள் வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்று கூறுவர். வாராஹி என்பவள், சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் ஆவாள். மேலும் இவள் எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற பிரச்சினைகளை நீக்க கூடிய தெய்வமாக  விளங்குகிறாள். பலர் வாராஹியை வழிப்பட்டாலும் இந்தியாவில் இவளுக்கு காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே தனி சன்னதி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!

தஞ்சையில்  வாராஹிக்கு முதல் பூஜை: 
வாராஹி பராசக்தியின் போர் படைத்தளபதியாக இருப்பதால் இவளை வழிப்படுவோருக்கு உலகம் முழுவதும் எதிரிகள் இருக்கவே மாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதுபோல் விழா காலங்களில் எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு தான் முதல் பூஜை நடத்துவர். ஆனால்  தஞ்சை பெரிய கோவிலில் மட்டும்  வாராஹிக்கே முதல் பூஜை நடக்கும். இது காலம் காலமாக செய்து வருகின்றனர்.

வாராஹியை வழிபடுவது எப்படி?
நீங்கள் வாராஹி அம்மனை வழிபட நினைத்தால் அவளை முழுமனதுடனும், எவ்விதமான தீய எண்ணங்கள் இல்லாமலும், மன தூய்மையுடனும் மனம் உருகி அவளுக்கும் என உரிய மந்திரங்களை சொல்லி தினமும் வழிபட்டு வந்தால் அவளது பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். 

வீட்டில் வாராஹியை வழிபடும் முறை:
ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் வாராஹியின் படம் வைத்து அவளை வழிபட நினைத்தால் வாராஹியின் முகம் வடக்கு நோக்கி, இருக்கும் படி வைத்து அவளை வழிபட வேண்டும். ஏனெனில் வாராஹிக்கு வடக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அதுபோல் வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி, அதில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபடுங்கள். மேலும் வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை அணிந்து வழிப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். வழிப்பாட்டில் தயிர் சாதம், மாதுளை படைத்து, சிவப்பு நிறம் கொண்ட மலர்கள் போன்றவை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

இதையும் படிங்க:  வராகி அம்மனுக்கு இவர்களை தான் மிகவும் பிடிக்குமாம்.. பிடிக்காதவர்கள் யார் தெரியுமா?

யாரெல்லாம்  வாராஹியை வழிபட வேண்டும்:
வாராஹியை வழிபட, 27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றும் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிக்காரர்கள், ஆகியோர் கண்டிப்பாக வாராஹியை வழிபட வேண்டும். இவர்கள் வழிப்படால் எவ்வித கஷ்டங்களும் அவர்களை அண்டாது. அதுபோல் சனி ஆதிக்கம் உடையவர்கள் மற்றும் சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபடலாம்.

எப்போது வாராஹியை வழிபட வேண்டும்?
வாராஹியை, ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவித்தாலும்,  செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹியை வழிபட வேண்டும். இந்நாளில் வாராஹிலை விளக்கு ஏற்றி வழிபட்டால், சனியால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கும். இவற்றை தவிர வாராஹி அம்மனை பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிப்படலாம். இச்சமயத்தில் வழிப்பட்டால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். அதுபோல் பஞ்சமி திதியன்று வாராஹியை மனமுருகி துதித்து பாடி வழிப்படால் அவள் உங்கள் வீடு தேடி வருவாள் என்று கூறப்படுகின்றது.

click me!