நீங்க வீடு கட்டுறீங்க..ஆனா வாஸ்துபடி வீடு கட்டுறீங்களானு தெரிஞ்சுக்கோங்க..!!

By Kalai Selvi  |  First Published Sep 8, 2023, 10:10 AM IST

நீங்கள் வீடு கட்டும்போது பின் கவனிக்க வேண்டிய சில வாஸ்து குறிப்புகள் இங்கே உள்ளன.


நீங்கள் புதியதாக வீடு கட்டி கொண்டிருக்கும் போது ஏதாவது சில காரணங்களால் அவை கட்டுவதற்கான தடைகள் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில், நீங்கள் சில வாஸ்து
விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும் உங்கள் தடைகள் அனைத்தும் நீங்கும். அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

வீடு கட்டும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய வாஸ்து குறிப்புகள்:

  • நீங்கள் வீடு கட்டும் போது வீட்டுக்கு திண்ணைகளை ஒருபோதும் வடக்கு மற்றும் கிழக்கில் உயரமாக அமைக்க வேண்டாம்.
  • அதுபோல் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மேல் வைக்கும் பூந்தொட்டியை வடக்கு மற்றும் கிழக்கு திசையில் வைக்க வேண்டாம்.
  • நீங்கள் வீடு கட்டும்போது ஒருபோதும் தென்மேற்கு திசையை நோக்கி மெயின் கேட் போர்டிகோ தலைவாசல் கிணறு வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த திசை உங்களுக்கு வேதனை மற்றும் சோதனைகளைத் தான் தரும்.
  • மேலும் வீட்டின் வாசலுக்கு எதிரில் கிணறு அல்லது குழி ஒருபோதும் இருக்க வேண்டாம்.
  • நீங்கள் நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், உங்களது வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்கும் காலி நிலங்களை வாங்கலாம்.
  • ஆனால் தெற்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும் காலி நிலங்களை ஒருபோதும் வாங்கவே வேண்டாம்.
  • வீடு கட்டிய பின் அது இருவருக்கு என பங்கிட்டு பாகப்பிரிவினையை ஒருபோதும் செய்யாதீங்க.
  • நீங்கள் ஒரே நிலத்தில் இரண்டு வீடு கட்ட நினைத்தால் முதலில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் தான் கட்ட வேண்டும். அதன் பின்னரே வடக்கு மற்றும் கிழக்கில் கட்டவும்.
  • அப்படி நீங்கள் ஒரே நிலத்தில் இரண்டு வீடு கட்டும் போது தெற்கில் கட்டப்படும் வீட்டை விட வடக்கில் கட்டப்படும் வீடு தாழ்வாக இருக்க வேண்டும். மேலும் மேற்கில் கட்டப்படும் வீட்டை விட கிழக்கில் கட்டப்படும் வீடு தாழ்வாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் கட்டும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கில் பாதை இருப்பது அல்லது  4 திசையிலும் பாதை இருப்பது நல்லது தான்.
  • குறிப்பாக வீடு பழுது பார்க்கும் பணியை ஒருபோதும் பாதியில் நிறுத்த வேண்டாம். அதற்கு பதிலாக மெதுவாகச் செய்தால் கூட பரவாயில்லை. 
  • அது போல் நீங்கள் வீடு கட்டும் முன் அல்லது செப்பனிடும் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு வீட்டின் ஈசானியத்தில் பூமி பூஜை செய்ய வேண்டும்.
  • முக்கியமாக நீங்கள் வீடு செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்கள் மூலம் தீர நிதானமாக ஆராய வேண்டும். அதன் பின்னரே வீட்டை பழுது பார்க்கும் பணியை வேகமாக மற்றும் கவனமாக செய்ய முடிக்கவும்.

Latest Videos

click me!