Weekly Rasi Palan: ரிஷப ராசியினரே.. இந்த வாரம் நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்.! அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்.!

Published : Aug 25, 2025, 01:41 PM IST
rishaba rasi

சுருக்கம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் இறுதி வாரம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த ராசிப் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷப ராசி: இந்த வார பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (ஆகஸ்ட் 25 முதல் 31 வரை) பல்வேறு வகைகளில் நன்மைகளும், முன்னேற்றங்களும் தரக்கூடிய வகையிலாக அமையும். இந்த வாரத்தில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது.

தொழில் வாழ்க்கை:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கும், உழைப்புக்கும் சரியான பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். குழு வேலைகளில் உங்கள் பங்களிப்பு தனித்து தெரியும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகலாம். புதிய முதலீடுகள் செய்வதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத பண வரவு அல்லது முந்தைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துவது நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள்:

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த வாரம் மகிழ்ச்சிகரமானதாக அமையும். உங்கள் துணையுடன் நல்ல புரிதல் மற்றும் இனிமையான தருணங்கள் அதிகரிக்கும். சிறிய பயணங்கள் அல்லது ஒன்றாக நேரம் செலவிடுவது உறவை வலுப்படுத்தும். பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறலாம். நண்பர்களுடன் உறவு மேம்படும். மேலும் அவர்களிடமிருந்து ஆலோசனைகள் அல்லது ஆதரவு கிடைக்கலாம்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இந்த வாரம் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு ஏற்றதாக அமையும். புரிந்து படிப்பதற்கு மனம் ஒருமுகப்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு உங்கள் கடின உழைப்பு உதவும். புதிய திறன்களை கற்பீர்கள். உங்கள் ஆர்வத்தை பின்பற்றுவது மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிய அளவிலான பயிற்சிகள், யோகா, தியானம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். இயற்கையுடன் இணைந்து இருப்பது மனதிற்கு அமைதி தரும்.

பிற ஆலோசனைகள்:

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வாகனம் ஓட்டும்பொழுது அவசரப்படாமல், நிதானமாக ஓட்ட வேண்டும். எந்த ஒரு விஷயமானாலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் பிரச்சனைகளை அணுக வேண்டும். விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் மாற்றங்கள்.! தயாரா இருங்க.!
Weekly Rasi Palan: கடக ராசி நேயர்களே, இந்த வாரம் வாய்ப்புகள் குவியும்.! புதிய கதவுகள் திறக்கும்.!