Zodiac signs: மேஷ ராசி நேயர்களே, இன்று சந்தோஷமும் அதிர்ஷ்டமும் காத்திருக்கு.! அற்புதம் நிகழும்.!

Published : Oct 04, 2025, 07:22 AM IST
Mesha Rasi

சுருக்கம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்பட்டாலும், நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி!

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நாள் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் நிறைந்ததாக அமைகிறது. கடந்த சில நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டை பெறும். சிறு சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கும். புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு தொடர்பான நல்ல தகவல் வரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சுமைகள் குறைந்து, புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். இன்று வியாபாரிகள் பணவரவிலும், வாடிக்கையாளர்களின் ஆதரவிலும் மகிழ்ச்சி அடைவார்கள்.

குடும்பத்தில் சிறிய மனவருத்தங்கள் இருந்தாலும், நாள் கடைசியில் ஒற்றுமை நிலவும். தாம்பத்ய வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். திருமணத்திற்கு தகுதியானவர்களுக்கு இன்று நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். மாணவர்கள் கவனமாக இருந்தால் தேர்வுகளில் சிறந்த பலன் பெறுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியத்தில் இன்று அதிக கவனம் தேவை. அதிகமான மன அழுத்தத்தை தவிர்த்து, ஓய்வு எடுப்பது நல்லது. பயணம் தொடர்பான திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத இடத்தில் பணவரவு கிடைக்கும்.

முதலீடு: குறுகிய கால முதலீடுகள் லாபகரமாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட உடை: வெள்ளை நிற உடை வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை 21 முறை ஜபிக்கவும்.

மொத்தத்தில்  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, வியாபாரம், குடும்பம் ஆகிய எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கிட்டும் நாள். நம்பிக்கை உடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Rasi Palan: தை 2-வது நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
Jan 16 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.! ரெடியா இருங்க.!