
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அமைதியான சூழலை நாடிச் செல்வீர்கள். உங்கள் கற்பனை திறன் சிறப்பாக இருக்கும். கலை, எழுத்து, இசை போன்ற படைப்பாற்றல் துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய விஷயங்களுக்கு திட்டமிடுவதற்கு நல்ல நாள். இந்த நாள் மனநிறைவையும், நிம்மதியான உணர்வையும் தரும்.
உங்கள் பழைய முதலீடுகளில் இருந்து அல்லது கடந்த கால முயற்சிகளிலிருந்து லாபம் வர வாய்ப்புள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக செலவுகள் ஏற்படலாம். செலவுகளை கவனமாக கையாள வேண்டும். பெரிய மற்றும் ஆபத்தான முதலீடுகளை செய்வதற்கு இது உகந்த நாள் அல்ல. நிதி விஷயங்களில் நிதானமாக முடிவுகளை எடுப்பது நல்லது. நிதி இலக்குகளை பற்றி குடும்பத்தினருடன் களையந்துரையாடி அதன் பின்னர் திட்டமிடுங்கள்.
குடும்ப உறவுகளில் அன்பு, ஆதரவு அதிகரிக்கும். துணையுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும், தனிப்பட்ட முறையில் வளர்ப்பதற்கும் இது நல்ல நாளாகும். பழைய கவலைகள்/பிரச்சனைகள் நீங்கி புதிய தெளிவும், நம்பிக்கையும் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிறைவாக உணர்வீர்கள்.
இன்று நரசிம்மர் ஆலயம் சென்று வெள்ளை மலர்கள் சாற்றி வழிபடலாம். நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் இறைவனுக்கு துளசி மாலை சமர்ப்பிக்கலாம். மன அமைதிக்காக தியானத்தில் ஈடுபடுவது நல்லது. ஏழை எளியவர்களுக்கு ஒருவேளை உணவளியுங்கள்.
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.