Oct 08 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே.. இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும்.! ஜெயம் உங்களுக்கு தான்.!

Published : Oct 07, 2025, 05:13 PM IST
meena rasi

சுருக்கம்

Today Rasi Palan: அக்டோபர் 08, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் நிதானமாக திட்டமிட்டு செய்யுங்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். 
  • தடைபட்டிருந்த வேலைகள் அல்லது முயற்சிகள் இன்று மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. 
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனம் விட்டு பேசுவது நன்மை பயக்கும். 
  • அதிக உழைப்பு மற்றும் கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். 
  • எனவே ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நிதி நிலைமை:

  • இன்று நீங்கள் செய்யும் சிறிய விஷயம் கூட லாபகரமானதாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 
  • வீண் செலவுகளை தவிர்த்து அத்தியாவசியங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள். 
  • ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவும். 
  • தொழில் வளர்ச்சிக்காக செய்யும் பெரிய முதலீடுகளில் அதிக எச்சரிக்கை தேவை. 
  • எதிர்பாராத நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கு, பெரிய முடிவுகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். 
  • ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைத் தரும். 
  • தாயார் மற்றும் மனைவிக்கிடையே சில மனஸ்தாபங்கள் வந்து நீங்கலாம். 
  • நீங்கள் சாமர்த்தியமாகவும் தன்மையாகவும் நடந்து கொள்வது குடும்பத்தில் நிலவும் தவறான புரிதல்களை நீக்க உதவும். 
  • முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் நன்மை பயக்கலாம்.

பரிகாரங்கள்:

  • மீன ராசிக்கு அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. 
  • தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். 
  • முதியவர்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது அல்லது தானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். 
  • உங்களுடைய முக்கிய பொறுப்புகளை நீங்களே தலைமையேற்று செய்யுங்கள். அடுத்தவரை நம்பி ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!