Oct 04 Today Rasi Palan: மீன ராசி நேயர்களுக்கான இன்றைய ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Published : Oct 03, 2025, 05:07 PM IST
Meena Rasi

சுருக்கம்

Today Rasi Palan: அக்டோபர் 04, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்று நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும், அதே சமயம் விழிப்புணர்வுடனும் இருப்பீர்கள். இது மற்றவர்களிடம் அதிக பரிவுடன் கனிவுடன் பேச உதவும். உங்களின் உள்ளுணர்வு மிக வலுவாக இருக்கும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவீர்கள். பணிச்சுமை காரணமாக இன்று மனச்சோர்வு ஏற்படலாம். எனவே உடலுக்கு மனதுக்கும் ஓய்வு கொடுப்பது நல்லது.

நிதி நிலைமை:

பண விஷயங்களில் இன்று கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். பணம் சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படுவதோ அல்லது அவசரப்பட்டு முடிவெடுப்பதோ வேண்டாம். சேமிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து சேமிப்பை தொடங்குவீர்கள். முதலீடு சம்பந்தமான முடிவுகளில் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடியுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகள் இடையே நெருக்கமான மற்றும் ஆழமான பிணைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களின் பரிவான குணம் மற்றும் பேச்சு மற்றவர்களை கவனத்தை ஈர்க்கும். இன்று யாரேனும் ஒருவர் உங்களது ஆறுதலைத் தேடியோ அல்லது ஆலோசனையை கேட்டோ வருவார்கள். அன்பான வார்த்தைகள் மற்றும் கணிவு நிறைந்த செயல்கள் மூலம் இன்று அனைவரையும் ஈர்ப்பீர்கள்.

பரிகாரங்கள்:

  • ஓம் நமச்சிவாய மந்திரத்தை ஜெபிப்பது மன அமைதியையும் ஆன்மீக பலத்தையும் கொடுக்கும். 
  • உங்கள் குலதெய்வத்தை வணங்குவது அனைத்து பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவும், மறதியில் இருந்து விடுபடவும் துணை புரியும். 
  • குருவின் அருளை பெற தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். 
  • ஏழை எளியவர்கள், இயலாதவர்களுக்கு தானம் வழங்குங்கள். 
  • மஞ்சள் நிற பொருட்களை தானமாக கொடுப்பது பலன்களை தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Impatient zodiac signs: இந்த 4 ராசிக்காரர்கள் அவசர குடுக்கையா இருப்பாங்களாம்.! கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்.!
Shukra Mangal Yuddh 2026: புத்தாண்டில் போரை தொடங்கும் எதிரி கிரகங்கள்.! 4 ராசிகள் தூக்கத்தை தொலைக்கப் போறீங்க.!