Meena Rasi Palan Dec 18: மீன ராசி நேயர்களே, இன்று முக்கியமான, மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.! ரெடியா இருங்க.!

Published : Dec 17, 2025, 03:33 PM IST
Meena Rasi Today Rasi Palan

சுருக்கம்

Dec 18 Meena Rasi Palan: டிசம்பர் 18, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 18, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுக்கும் திறன் கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றமும், தந்தை வழியில் மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கலாம். தொலைதூரப் பயணங்கள் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

நிதி நிலைமை:

பொருளாதார ரீதியாக இன்று லாபகரமான நாளாக இருக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாளாக இருக்கும். பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் குறித்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம். உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். சமூகத்தில் கௌரவம் உயரும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் கைகூடும்.

பரிகாரங்கள்:

இன்று சீரடி சாய்பாபாவை வழிபடுவது நல்லது. பாபாவுக்கு செவ்வரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல் நைவேதியம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். ஏழைகளுக்கு கொண்டைக்கடலை தானம் செய்வது கர்ம வினைகளைக் குறைக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பின் வாழ்க்கை அழகாக மாறும்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
100 வருடங்களுக்குப் பிறகு குரு சுக்கிரன் உருவாக்கும் சிறப்பு சேர்க்கை.! 5 ராசிகள் வாழ்க்கையில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!