Meena Rasi Palan Dec 13: மீன ராசி நேயர்களே, லாப வீட்டில் சுப கிரகங்கள்.! இன்று பண மழை கொட்டும்.!

Published : Dec 12, 2025, 04:27 PM IST
Meena Rasi Today Rasi Palan

சுருக்கம்

Dec 13 Meena Rasi Palan: டிசம்பர் 13, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 13, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் புத்துணர்ச்சியுடனும், நேர்மறை சிந்தனையுடனும் காணப்படுவீர்கள். சந்திர பகவானின் நிலை காரணமாக குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள சுப கிரகங்களால் வேலை மற்றும் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனித தலங்கள் அல்லது தொலைதூரப் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உருவாகும்.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் திடீர் பண வரவு அல்லது முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சில கிரகங்கள் இருப்பதால் தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்த்து விடுங்கள். நீண்ட கால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பதற்கு ஏதுவான நாளாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

சந்திர பகவானின் நிலை காரணமாக இன்று குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும். காதல் உறவுகள் இனிமையாகவும், பலமாகவும் மாறும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல செய்திகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் பேச்சில் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

இன்று நரசிம்மரை வழிபடுவது நல்லது. நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று பானகம் நைவேதியம் படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். கோவிலில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது சகல நன்மைகளைத் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்புகளைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Surya Peyarchi 2026: ஜனவரியில் 3 முறை பாதையை மாற்றும் சூரிய பகவான்.! செல்வ செழிப்பை பெறப்போகும் 5 ராசிகள்.!
Impatient zodiac signs: இந்த 4 ராசிக்காரர்கள் அவசர குடுக்கையா இருப்பாங்களாம்.! கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்.!