
விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் 1500 ஆண்டுகள் பழமையான மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேக வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்களால் பாடல் பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும். அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த இந்த ஆலயம் காசிக்கு நிகரான ஆறு ஆலயங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- வாராஹி அம்மனை இந்நாட்களில் வழிப்பட்டால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
இதனைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2022-ம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் வர்ணங்கள் தீட்டப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தன. இந்நிலையில், மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க;- Palli vilum palan : உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் கெட்டது நடக்கும்? என்ன பரிகாரம்?
புனிதநீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து கொண்டு கோயில் விமானத்தை அடைந்து இன்று காலை 7.30 மணியளவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.