
Mahashivratri 2025 Shiva Mantra in Tamil : ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படும் மகாசிவராத்திரி 2025 ஆம் ஆண்டு இன்று பிப்ரவரி 26ஆம் தேதியான இன்று கடைபிடிடிக்கப்படுகிறது. இந்த நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை நினைத்து மனம் உருகி இந்த மந்திரங்களை சொல்லி வழிபட எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் 10 மந்திரங்கள்:
1. மஹாம்ருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் |
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத் ||
பலன்- இது மஹாம்ருத்யுஞ்சய மந்திரம். சாஸ்திரங்களின்படி, இந்த மந்திரத்துக்கு மரணத்தை கூட ஜெயிக்கும் சக்தி உண்டு. உடம்பு சரியில்லாதவங்களுக்காக இந்த மந்திரத்தை ஜெபித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.
2. ஓம் நமோ பகவதே ருத்ராய நம:
பலன்- இந்த மந்திரம் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும். இது ருத்ர மந்திரம். இந்த மந்திரத்தை சொல்லி சிவ வழிபாடு செய்தால் அகால மரணத்தை கூட தடுக்கலாம்.
3. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர: ப்ரசோதயாத் ||
பலன்- இது சிவ காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் ஜெபிச்சா மனசு அமைதியாகும், வாழ்க்கையில் இருக்கிற கஷ்டங்கள் தானாகவே சரியாகும்.
4. ஓம் பசுபதாய நம:
பலன்- இந்த மந்திரத்தை ஜெபிச்சா சிவன் நம்ம மேல எப்பவும் கருணை காட்டுவார், நல்ல பலன் கிடைக்கும்.
5. ஓம் நம: சிவாய
பலன்- இது பஞ்சாட்சரி மந்திரம். இது தான் சிவனுடைய முக்கியமான மந்திரம். இத ஜெபிச்சா எல்லா கஷ்டத்துல இருந்தும் விடுதலை கிடைக்கும்.
6. ஷம்பவாய ச மயோபவாய ச நம: சங்கராய ச
மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச
பலன்- இந்த மந்திரம் ரொம்ப நல்ல பலன் கொடுக்கும். இத ஜெபிச்சா எல்லா ஆசையும் நிறைவேறும்.
7. ஓம் ஹ்ரீம் ஹ்ரௌம் நம: சிவாய
8. ஓம் பார்வதிபதயே நம:
9. ஓம் பசுபதயே நம:
10. நமோ நீலகண்டாய நம:
பலன்- இந்த மந்திரங்களை மகாசிவராத்திரி அல்லது வேற ஏதாவது நல்ல நாள்ல ஜெபிச்சா எல்லா தொந்தரவும் சரியாகும்.