Magara Rasi Palan Dec 20: மகர ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு கொட்டும்.! கடன்களை அடைப்பீர்கள்.!

Published : Dec 19, 2025, 05:15 PM IST
Magara Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 20 Magara Rasi Palan : டிசம்பர் 20, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 20, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சனி பகவானின் நிலை காரணமாக தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான பயண முயற்சிகள் வெற்றியில் முடியும்.

நிதி நிலைமை:

ராகு பகவானின் நிலை காரணமாக திடீர் பணவரவுக்கும், அதே சமயம் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை திருப்பி செலுத்த சாதகமான சூழல் அமையும். பணம் கொடுக்கல், வாங்கலில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் அதிக செலுத்த வேண்டி வரலாம். வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து மோதல்கள் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை என்பதால் பெருமாளை வழிபடுவது நன்மை தரும். விஷ்ணு ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன தைரியத்தை அதிகரிக்கும். காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியவர்களுக்கு போர்வை தானம் செய்வது நன்மைகளைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kumba Rasi Palan Dec 20: கும்ப ராசி நேயர்களே, சூரிய பகவான் அருளால் இன்று பல விஷயங்களை சாதிப்பீர்கள்.!
Meena Rasi Palan Dec 20: மீன ராசி நேயர்களே, இன்று எத்தனை தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்குத்தான்.!