Magara Rasi Palan Dec 11: மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Published : Dec 10, 2025, 04:02 PM IST
Magara Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 11 Magara Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 11, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கான யோகம் கிடைக்கும். உங்களின் பொறுமை, அமைதி ஆகியவை நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் பண வரவுக்கு பெரிய அளவில் குறை இருக்காது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சமூக அந்தஸ்து மேம்படும். கலைப்பொருட்கள், அலங்காரப் பொருட்களுக்காக செலவு செய்வீர்கள். வீட்டை மராமத்து செய்யும் பணிகள் தொடங்கும். குறுகிய கால முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவுகளிடையே மதிப்பு மரியாதை உயரும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கை அனுகூலமாக இருக்கும். திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.

பரிகாரங்கள்:

இன்று சிவபெருமான் அல்லது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஆனந்த சயனத்தில் இருக்கும் பத்மநாபசுவாமி வழிபாடு ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். தர்ம காரியங்களுக்கு உதவுவது அல்லது கோவில்களில் நடக்கும் அன்னதானங்களுக்கு நன்கொடை அளிப்பது பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kumba Rasi Palan Dec 11: கும்ப ராசி நேயர்களே, புதன் பெயர்ச்சியால் தொழிலில் லாபத்தைக் குவிக்கப்போறீங்க.!
Meena Rasi Palan Dec 11: மீன ராசி நேயர்களே, இன்று வரப்போகும் அதிர்ஷ்டம்.! பணவரவு கொட்டும்.!