
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் பகவான் தலைமைத்துவம், உறுதி மற்றும் கௌரவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரகமாக இருக்கிறார். இவர் அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக பார்க்கப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனின் நிலை நன்றாக இருக்கும் பொழுது அந்த நபருக்கு அளவில்லாத மகிழ்ச்சி, கௌரவம், பண வரவு, வெற்றி போன்ற பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால் சிம்ம ராசிக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆனால் அவரது பலம் மற்ற ராசிகளிலும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. 12 ராசிகளில் சில ராசிகள் சூரிய பகவானால் அதிகம் விரும்பப்படுகின்றனர். இந்த ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் நிதி சிக்கல்களில் சிக்கிக் கொள்வதில்லை. தொழில், படிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தும் அவர்களுக்கு சிறப்பானதாக அமையும். சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்ம ராசி சூரியனின் சொந்த ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமைத்துவம், கம்பீரம் மற்றும் உறுதியான மனநிலையை பெற்றவர்கள். சூரியனின் ஆதிக்கம் இவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஆற்றலையும் அளிக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். வணிகம், கலை, அரசியல், பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் இவர்கள் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். இந்த துறைகளில் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களுக்கு பண வரவு கிடைக்கும். முதலீடுகளில் வெற்றி பெறுவதற்கும், புதிய வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கும். சூரியனின் திசை அல்லது சூரிய மகா திசை இருக்கும் பொழுது சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு பன்மடங்காக உயரும். சூரியனின் அருளை மேலும் பெறுவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு அர்கியம் கொடுப்பது, ஆதித்த ஹிருதயம் பாராயணம் செய்வது பலனளிக்கும்.
மேஷ ராசி சூரியனின் உயர்ந்த ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் தைரியம், முயற்சி மற்றும் உற்சாகத்துடன் செயல்படுபவர்கள். சூரியனின் ஆற்றல் இவர்களுக்கு முன்னேற்றத்தையும் தடைகளை தாண்டும் வலிமையும் அளிக்கிறது. மேஷ ராசிக்காரர்கள் தலைமைப் பொறுப்புக்கள், தொழில் முனைவோர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள். இவர்களின் முடிவெடுக்கும் திறன், ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவை பண வரவை அதிகரிக்க உதவும். சூரியனின் கோசார நிலை அல்லது சூரியத் திசை இருக்கும் பொழுது இவர்களுக்கு எதிர்பாராத பண ஆதாரங்கள் கிடைக்கலாம். சூரியனை வழிபடுவதற்கு மாணிக்கம் அணிவது அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகுவது பலன் அளிக்கும்.
தனுசு ராசி சூரியனுக்கு நட்பு ராசியாக விளங்குகிறது. இந்த ராசிக்காரர்கள் ஞானம், ஆன்மீகம் மற்றும் பயணங்களை விரும்புவார்கள். சூரியனின் ஆற்றல் இவர்களுக்கு பிறரை ஊக்குவிக்கும் திறனையும், சமூகத்தில் உயர் பதவிகளை அடையும் வாய்ப்பையும் அளிக்கிறது. தனுசு ராசிக்காரர்கள் கல்வி, ஆன்மீகம், பயணம் அல்லது சர்வதேச வணிகத்தில் பணவரவு பெறுவார்கள். சூரியனின் அருளால் இவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், புதிய தொழில் தொடங்குவதற்கான உதவிகள், முதலீடுகளில் லாபம் ஆகியவை கிடைக்கலாம். சூரியனின் ஆசியைப் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை அல்லது சிகப்பு நிற உணவுகளை தானம் செய்யலாம்.
விருச்சக ராசிக்கு சூரியன் நட்பு கிரகமாக இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் உறுதியான மனநிலையை கொண்டவர்கள். சூரியனின் தாக்கம் இவர்களுக்கு ஆராய்ச்சி, மருத்துவம் அல்லது மறைமுகமான துறைகளில் வெற்றியை அளிக்கிறது. சூரியனின் அருளால் விருச்சிக ராசிக்காரர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, ரியல் எஸ்டேட் துறைகள் மூலமாக பண வரவு பெறுவார்கள். திசை அல்லது கோசார நிலை இவர்களுக்கு எதிர்பாராத பண ஆதாயங்கள் மற்றும் மரபு சொத்துக்களை கொண்டு வரலாம். சூரியனை வழிபடுவதற்கு சிகப்பு நிற மலர்களை சூரியனுக்கு அர்பணிப்பது அல்லது ஆதித்ய ஹிருதயம் படிப்பது பலன்களைத் தரும்.
சூரியனின் தாக்கம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தலைமைத்துவ பதவிகளை அளிக்கிறது. இதனால் உயர் ஊதியம் மற்றும் மரியாதை கிடைக்கிறது. சூரியனின் ஆற்றல் திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. இதனால் வணிகம் மற்றும் முதலீடுகளில் வெற்றி கிடைக்கிறது. சூரியனின் திசை அல்லது கோசார நிலையில் இவர்களுக்கு மரபு சொத்து, போனஸ் அல்லது புதிய வாய்ப்புகள் மூலம் பணவரவு கிடைக்கச் செய்கிறது. சூரியனின் அருளை பெறுவதற்கு சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது, சிவப்பு நிற உடைகள், கோதுமை, செம்பு பொருட்களை தானம் செய்வது, மாணிக்கம் அணிவது, காலையில் சூரிய உதயத்தை பார்ப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது ஆகியற்றை செய்வதன மூலம் சூரியனின் அருளைப் பெறலாம்.
(குறிப்பு: சூரிய பகவான் பொதுவாக 12 ராசிகளுக்கும் அருள் புரிபவரே. இருப்பினும் சிம்மம், மேஷம், தனுசு மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர் கூடுதலை பலன்களைத் தருகிறார். இந்த ராசிகளுக்கு சூரியனின் தாக்கத்தால் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், பணவரவு ஆகியவை அதிகரிக்கும். சூரிய வழிபாடு மற்றும் பிற பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் மேலும் செல்வாக்கு மற்றும் செல்வத்தை பெறலாம். இந்த ஜோதிட ஆலோசனைகள் மற்றும் பலன்கள் அனைத்தும் பொதுவானவையே. இதை பின்பற்றுவதற்கு முன்னர் தகுதி வாய்ந்த ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது முக்கியம்)