Kumba Rasi Palan Jan 02: கும்ப ராசி நேயர்களே, இதுவரை இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் இன்று நீங்கும்.!

Published : Jan 01, 2026, 04:30 PM IST
Kumba Rasi Today Rasi palan

சுருக்கம்

Jan 02 Kumba Rasi Palan: ஜனவரி 02, 2026 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

ஜனவரி 02, 2026 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, குருவின் பார்வை காரணமாக இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ராகு பகவானின் நிலையால் தேவையற்ற சிந்தனைகள் எழக்கூடும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் இருப்பதால் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சகோதரர் வழியில் நிதி ஆதாயம் கிடைக்கலாம். சனி பகவானின் நிலையால் பேச்சில் நிதானம் தேவை. இல்லையெனில் அது நிதி இழப்பிற்கு வழிவகுக்கலாம். தொழில் முதலீடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை செய்யாமல் இருப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களையே விட்டுக் கொடுத்து செல்வது அமைதியைக் கொடுக்கும். கேது பகவானின் நிலை காரணமாக வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். இது மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது பொருளாதார மேன்மையை அளிக்கும். மன தைரியத்தையும், காரியத்தில் வெற்றியும் பெறுவதற்கு ஆஞ்சநேயரை வழிபடலாம். ஆதரவற்றவர்களுக்கு போர்வை அல்லது வஸ்திரம் தானமாக வழங்குவது பலன்களை கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meena Rasi Palan Jan 02: மீன ராசி நேயர்களே, இன்று ரொம்ப நிதானமா இருங்க.! இல்லைனா ஆப்பு உங்களுக்குத் தான்.!
Zodiac signs: இந்த 5 ராசிக்காரங்க சின்ன வயசுல கஷ்டப்பட்டாலும், 40 வயசுக்கு மேல கோடீஸ்வரரா மாறுவங்களாம்.! உங்க ராசி இருக்கா?