Kumba Rasi Palan Dec 19: கும்ப ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க.! ஜாக்கிரதை.!

Published : Dec 18, 2025, 03:00 PM IST
Kumba Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 19 Kumba Rasi Palan: டிசம்பர் 19, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 19, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாளாகும். ராகு பகவானின் நிலை காரணமாக தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படலாம். எனவே தியானம் மேற்கொள்வது அமைதியைத் தரும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நலம்.

நிதி நிலைமை:

இன்று பண வரவு சீராக இருக்கும். ஆனால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பாரத நேரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விட்டுக்கொடுத்த செல்வது உறவை பலப்படுத்தும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும்பொழுது பேச்சில் நிதானம் அவசியம்.

பரிகாரங்கள்:

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும். தடைகள் நீங்க சிவபெருமானை வழிபடலாம். ஆதரவற்ற முதியவர்களுக்கு உங்களால் இயன்ற உணவு அல்லது உடைதானம் வழங்குவது சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும். “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது நற்பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meena Rasi Palan Dec 19: மீன ராசி நேயர்களே, சனி பகவானால் இன்று பல பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.!
Guru Peyarchi 2026: சிம்ம ராசியில் அமரும் குரு பகவான்.! 2026 முதல் இந்த ராசிகள் பணத்தையும், புகழையும் அள்ளப் போறீங்க.!