Kumba Rasi Palan Dec 17: கும்ப ராசி நேயர்களே, இன்று அனைத்து பிரச்சனைகளும் தீரும்.! நல்ல காலம் பிறக்கும்.!

Published : Dec 16, 2025, 04:37 PM IST
Kumba Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 17 Kumba Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 17, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். சனி பகவானின் நிலையால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாகவும் பிறமூலங்கள் வழியாகவும் லாபம் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் அலங்காரப் பொருட்கள் அல்லது சுப விஷயங்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். நிதி சார்ந்த விஷயங்களை எடுக்கும் பொழுது அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

சந்திர பகவானின் நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது நிதானத்துடன் பேச வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவில் இனிமையான பேச்சுக்கள் மூலம் நல்லிணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவியின் முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

பரிகாரங்கள்:

இன்று அனுமனை வழிபடுவது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தி பலத்தைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் வயதானவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு அல்லது உடைகள் வழங்கலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meena Rasi Palan Dec 17: மீன ராசி நேயர்களே, இன்று தன லாபம் கிடைக்கும்.! அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.!
Margazhi Month Rasi Palan 2025: மார்கழி பொறந்தாச்சு.! சூரியன் அருளால் இந்த 5 ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!