நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கினை எந்த நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
நம் வீட்டில் இருக்கும் தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை. குத்துவிளக்கு அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், அது கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
இந்த நாளில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டாம்:
திங்கட்கிழமை நடுராத்திரி முதல் புதன்கிழமை நடுராத்திரி வரை குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் குத்துவிளக்கை சுத்தம் செய்தால், இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளி அன்றும் தேய்த்தால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.
இதையும் படிங்க: Vastu tips: மாலையில் இந்த திசையில் மட்டும் விளக்கு ஏற்றாதிங்க! வாழ்வில் துயரங்கள் சூழும்!
விளக்கை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்?
வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கு ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கு ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனிக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கு ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம். ஏதோ ஒரு சக்தி இதில் உள்ளது என்பதால் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.