
தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் உங்கள் சாதுரியத்தால் எதிர்வரும் தடைகள் அனைத்தையும் உடைத்து எறிவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை இன்று அபரிமிதமாக அதிகரிக்கும். வேலையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும் கவனத்துடன் செயல்பட்டு அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
வீட்டின் பராமரிப்பு அல்லது புனரமைப்பு பணிகளுக்காக பணம் செலவிட நேரிடலாம். இதன் காரணமாக செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். உங்கள் நெருங்கிய உறவினர்களுக்காகவும் பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே இன்று நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிகப்படியான செலவுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
குடும்பத்தில் உள்ள பிரச்சனையை துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் காரணமாக உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்த கஷ்டங்கள் தீரும். துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். துணையுடன் பேசும் பொழுது உணர்ச்சிவசப்படாமல், நிதானத்தை கடைபிடியுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் மேலும் அதிகரிக்கும்.
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.