Dhanusu Rasi Palan Dec 18: தனுசு ராசி நேயர்களே, இன்று நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கப்போகுது.!

Published : Dec 17, 2025, 03:43 PM IST
Dhanusu Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 18 Dhanusu Rasi Palan: டிசம்பர் 18, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 18, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைக்கலாம். இன்று தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது மனதிற்கு அமைதி தரும்.

நிதி நிலைமை:

இன்று பண வரவுக்கு எந்த குறைவும் ஏற்படாது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை அல்லது புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. பெரிய முதலீடுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மை தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று கணவன் மனைவிக்கு இடையே புரிதல் மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும் பொழுது அமைதியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். பழைய உறவுகளை புதுப்பிப்பதற்கான சூழல் உருவாகும்.

பரிகாரங்கள்:

இன்று துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை வழங்குவது தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். ஏழைப் பெண்களுக்கு சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magara Rasi Palan Dec 18: மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் தூள் பறக்கும்.!
Kumba Rasi Palan Dec 18: கும்ப ராசி நேயர்களே, இன்று அடிக்கும் ஜாக்பாட்.! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் கவனம்.!