
கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு மனதளவில் புதிய உத்வேகம் பிறக்கும். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவும். குறிப்பாக இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.
பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சுப செலவுகள் வரிசை கட்டி நிற்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் காரணமாக பட்ஜெட் பாதிக்கப்படலாம். வணிகத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கான சூழல்கள் உருவாகும்.
அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட சிறு உபாதைகள் தோன்றி மறையும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் வாரமாக இருக்கும். ஆனால் கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு கடின உழைப்பிற்கு பின்னர் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் அலுவலக நிர்வாகத்தை பற்றி விமர்சனம் செய்தல் கூடாது. தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஆர்டர்கள் தேடி வரும். பணிமாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழல் நிலவும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் படிப்படியாக உயரும்.
கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளை அளந்து பேசவும். சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக திட்டமிடுவீர்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இந்த வாரம் உங்கள் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி இலைகளால் அர்ச்சனை செய்வது சிறந்தது. இயலாத மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களான பேனாக்கள், புத்தகங்கள் தானமாக வழங்கலாம். “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிக்கவும். ஏழை, எளியவர்களுக்கு உணவு வாங்கி அளிப்பது பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)