சிறிய மஞ்சள் கட்டியை பர்ஸில் வைத்துக் கொள்ள வாழ்வில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
சமையலறையில் மஞ்சள் மிகவும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது. அழகிற்கும் பயன்படுத்தப்படுகிறது. சரும மாசுக்களை நீக்குகிறது. சளி, இருமல் என்று எந்த தொந்திரவு வந்தாலும், மஞ்சள் கைகொடுக்கும். சமையலறையில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்து சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஞ்சளுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மஞ்சளானது வழிபாடு மற்றும் மங்களகரமான செயல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
undefined
வாஸ்து சாஸ்திரத்தில் மஞ்சளின் பல பரிகாரங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. இதைச் செய்தால் ஒருவருக்கு வரும் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்துவிடும். பர்ஸில் மஞ்சள் கட்டியை வைத்தால் நல்லது நடக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி செய்தால், உங்கள் வாழ்க்கையில் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். மேலும் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.
பொதுவாக வியாழன் கடவுள் விஷ்ணுவின் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் மஞ்சள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வியாழக் கிழமையன்று விஷ்ணுவை வழிபட்டு, மஞ்சள் திலகம் சாற்றினால் அவரது அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், மஞ்சள் கட்டியைப் பயன்படுத்துவது வியாழன் கிரகத்தை வலுப்படுத்துகிறது மற்றும் அனைத்து குறைபாடுகளிலிருந்தும் ஒருவரை விடுவிக்கிறது.
மஞ்சள் கட்டியை பர்ஸில் வைத்திருப்பதால் ராகு-கேது தோஷத்தில் இருந்து விடுபடலாம் மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் வரும் அனைத்து தொல்லைகளும் விலகும். இதனுடன் இழந்த பணத்தையும் ஒருவர் திரும்பப் பெறுவார். ஆதலால் உங்களது பர்ஸில் மஞ்சள் கட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள்.
பர்ஸில் மஞ்சள் கட்டி இருக்க வேண்டும். ஏனெனில் லட்சுமி தேவி பணம் இருக்கும் இடத்தில்தான் வாசம் செய்கிறார். அது ஒரு போதும் காலியாக இருக்கக் கூடாது.