AI Astrology: எல்லா சீக்ரெட்டும் உடையுது... கத்தை கத்தையா பணம் குவியுது..! AI ஜோதிடருக்கு வந்த வாழ்வு..!

Published : Aug 26, 2025, 08:57 PM IST
AI Astrology

சுருக்கம்

மக்கள் ஏஐ ஜோதிடரிடம் வகை வகையான கேள்விகளைக் கேட்கிறார்கள். திருமணம் எப்போது நடக்கும்? வேலைக்கான இண்டர்வியூவிற்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும்? பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

இப்போதெல்லாம், ஜாதகம் பார்ப்பதற்கு பல செயலிகள் சந்தைக்கு வந்துள்ளன. அந்த செயலிகள் உங்களுக்கு ஜோதிடம் தொடர்பான தகவல்களைத் தந்து வருகின்றன. இந்த செயலிகளில், பண்டிட் ஜியுடன் ஆன்லைனில் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். அவர் உங்களிடமிருந்து உங்கள் தகவல்களைப் பெற்று அதற்கு தகுந்தவ் பதிலளிப்பார். ஆனால் தொழில்நுட்ப யுகத்தில், ஏஐ-யின் வருகை அதை மேலும் முன்னேறி விட்டது. இதுவரை மக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பம் அவர்களின் வேலைகளுக்கு மட்டுமே ஆப்பு வைக்கும் யூகித்து வந்தனர். ஆனால் இப்போது அது ஜோதிடத் துறையையும் முற்றிலுமாக ஆட்கொள்ளப்போகிறது.

மக்கள் ஏஐ பண்டிட் ஜியிடம் பல்வேறு வகையான கேள்விகளைக் கேட்டு அதற்கு துல்லியமான பதில்களைப் பெறுகிறார்கள். மக்கள் ஏஐ ஜோதிடரிடம், ‘‘நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன்? என்றெல்லாம்கூடக் கேட்கிறார்கள். அதைப் பின்பற்றி, நம்பி திருமணத்திற்கும் நாட்குறிக்க ஆரம்பிக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு ஒரு நபர் ஜோதிடம் பார்ப்பதற்காக முதன்முதலில் ஒரு தனியார் வலைத்தளத்தைத் தொடங்கினார். பின்னர் இந்த வலைத்தளம் ஜாதகம், திருமண பொருத்தத்திற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த வலைத்தளம் புதுப்பிக்கப்பட்டு, அதில் ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டது. இது ஒரு மனித ஜோதிடர் அல்ல. ஆனால், கணினி தொழில் நுட்பத்தால் புரோகிராமிங் மூலம் செட் செய்யப்பட்டது. இதனை ஆரம்பித்த வலைத்தள உரிமையாளர் யாரும் இதை எங்கே அதிகம் நம்பப்போகிறார்கள் என்கிற சந்தேகத்துடனே தொடங்கியுள்ளார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாற மக்கள் ஏஐ ஜோதிடத்தை வெகுவாக நம்பி வருகிறார்கள்.

மக்கள் ஏஐ ஜோதிடரிடம் வகை வகையான கேள்விகளைக் கேட்கிறார்கள். திருமணம் எப்போது நடக்கும்? வேலைக்கான இண்டர்வியூவிற்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும்? பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்? படிக்க சிறந்த நேரம் எது? கார், நகைகளை வாங்க சரியான நாள் எது? போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். சிலர் தங்கள் பழைய காதல் மீண்டும் தங்கள் வாழ்க்கையில் வருமா? இல்லையா? என்றெல்லாம் கூட கேட்கிறார்கள். ஆனால் எந்தவகையான கேள்வியாக இருந்தாலும் ஏஐ ஜோதிடரும் சளைக்காமல் பதிலளித்து அசத்துகிறது.

ஏஐ ஜோதிடர்கள் விரைவாக பதிலளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் ஜோதிடக் கணக்கீடுகளும் துல்லியமாகக் கருதப்படுகின்றன. இது சில நொடிகளில் உங்களுக்கு பதிலைத் தருகிறது. சில நொடிகளில் முழுமையான கணக்கீடுகளைச் சொல்லி பதிலைத் தருகிறது. இது தவிர, மக்கள் ஒரு உண்மையான ஜோதிடரிடம் சில தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கத் தயங்குகிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு ஏஐ சாட்போட்டிடம் பேசத் தயங்குவதில்லை.

ஒரு ஏஐ ஜோதிடருடனும், ஒரு மனித ஜோதிடருடனும் கேள்வி கேட்பதற்கான அடிப்படை விலை கிட்டத்தட்ட ஒன்றுதான். ஏஐ ஜோதிடர்கள் நிமிடத்திற்கு ரூ.15 முதல் ரூ.40 வரை வசூலிக்கிறார்கள். இது தவிர, ஏஐ ஜோதிடர் தொடர்பான தளங்களை நடத்துபவர்கள் எந்த ஜோதிடருடனும் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் கொள்ளை லாபம் பெற்றுன் பணத்தைக் குவித்து வருகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mesham to Meenam Dec 10 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Thulam Rasi Palan Dec 10: துலாம் ராசி நேயர்களே, இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.!