பீர்க்கன்
பீர்க்கன் மகசூலுக்கு வர 65 முதல் 80 நாட்கள் வரை ஆகும். அதுவரை, குறும்புடலை இரண்டு தினங்களுக்கு ஒருமுறையும், பெரும்புடலை மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
80 நாட்களுக்கு மேல் ஒருநாள் விட்டு ஒருநாள் பீர்க்கன் அறுவடை செய்யலாம். ஆக, சுழற்சி முறையில் தினமும் ஏதாவது ஒரு காய் அறுவடை நடந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், அதிகப்படியான இலைகளை கைகளால் கிள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கிளைகள் தோன்றி அதிக பூக்கள் வைக்கும்.
பூச்சி, நோய் தாக்குதலைப் பொறுத்தவரை, அசுவிணி தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கு பயோ மருந்தை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அடுத்ததாக வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
அதற்கும் பயோ மருந்து கடைகளில் மருந்து கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். சாறு உறிஞ்சும்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளைக்கொசு தாக்குதலும் அதிகளவு இருக்கும்.
அதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தெளிக்கலாம். மற்றபடி பீர்க்கன், புடலை இரண்டுக்கும் ஒரே பராமரிப்பு முறைதான்.
தூசி, மண் இல்லாத பசும் சாணத்தை தேவையான தண்ணீர் ஊற்றி பால் பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். அதில் விதைகளைக் கொட்டி, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, விதைகளை எடுத்து பருத்தி துணியில் கொட்டி, நீரை வடிகட்ட வேண்டும். அதை துணியில் முடிச்சாக கட்டி, லேசாக தண்ணீரில் நனைத்து 6 மணி நேரம் நிழலில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு விதைகளை எடுத்து நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும். இதனால் மகசூலும் அதிகம் கிடைக்கும்.