வறட்சி பூமியிலும் இருக்கும் நீரை கொண்டும் கொத்தவரை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.
15 சென்ட் நிலம் இருந்தால் போதும். நீங்களும் கொத்தவரை விதைக்கலாம். 30 நாளில் காய்கள் பூக்கும்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை 60 கிலோ காய்கள் கிடைக்கும்.
கிலோ ரூ.40 வரை விற்று நல்ல லாபம் பெறலாம்.
சந்தையில் போதிய விலை கிடைக்காமல் இருந்தாலும், வருமானம் சீராகவே இருக்கும்.
60 நாட்கள் வரை காய்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பதால், மற்ற விவசாயத்தை விட இதில் லாபம் அதிகமாக உண்டு.
தற்போது கோடை காலமாக இருப்பதால் ஆழ்குழாயில் தண்ணீர் குறைவாக இருக்கும். நீர்மட்டம் கொஞ்சம் அதிகரித்தவுடன் அனைத்து பரப்பிலும் கொத்தவரையை பயிர் செய்யலாம்